என்னது.. நடிகை சங்கீதா-கிரிஷ் விவாகரத்தா! இன்ஸ்டாகிராமில் தெரிய வந்த உண்மை! நடிகை சங்கீதா தனியாக வாழ்கிறாரா?



actress-sangeetha-divorce-rumors

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் முன்னணி நடிகையாக பிரபலமான சங்கீதா, தற்போது தனியாக வாழ்வதாக தகவல் வெளியானது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்று வந்த அவர், காதல் திருமணம் செய்த பின்னணிப் பாடகர் கிரிஷ்ஷுடன் தற்போது விலகிஇருக்கிறார் என தகவல்கள் வெளியாகின்றன.

மலையாளம் முதல் தெலுங்கு வரை

முதலில் மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமான சங்கீதா, தமிழில் கபடி கபடி, பிதாமகன், காதலே நிம்மதி, டபுள்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் பெரிய வரவேற்பு கிடைக்காததால் தெலுங்கு திரையுலகை நோக்கி சென்ற சங்கீதா, அங்கே முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.

பிதாமகன் மூலம் புகழ் பெற்றவர்

தமிழில் இயக்குநர் பாலாவின் பிதாமகன் படத்தில் நடித்த சங்கீதா, தனது நடிப்பால் கவனம் ஈர்த்தார். அதே நேரத்தில், இயக்குநர் சாமி இயக்கிய உயிர்  படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்ததற்காக விமர்சனத்தையும் எதிர்கொண்டார். இதில், அவர் கதையின் நாயகனான ஸ்ரீகாந்தின் தம்பியுடன் காதல் கொள்ளும் 'அண்ணி' கதாபாத்திரத்தில் நடித்தார்.

இதையும் படிங்க: தமன்னாவின் அந்த பாடல் மாதிரி இருக்காது.! ஆனா.. கூலி பாடல் குறித்து நடிகை பூஜா ஹெக்டே ஓபன் டாக்!

திருமண வாழ்க்கையில் கோளாறு?

படப்பிடிப்புகளின் நேரத்தில் கிரிஷ்ஷை காதலித்து திருமணம் செய்த சங்கீதா, திருமணத்துக்குப் பிறகும் தனது பிஸியான நடிப்பு வாழ்க்கையைத் தொடர்ந்தார். அவருக்கும் கிரிஷ்ஷுக்கும் வயதில் வித்தியாசம் இருப்பதாக செய்திகள் வந்தபோதும், சங்கீதா சமீப பேட்டியில் கிரிஷ்ஷிற்கு தான் வயது அதிகம் என தெரிவித்தார்.

விவாகரத்து தகவல் சமூக வலைதளங்களில்

இப்போது, சங்கீதா மற்றும் கிரிஷ்ஷ் இருவரும் விவாகரத்து பெற இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சங்கீதா தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை ‘Sangeetha Act’ என மாற்றியிருப்பதும், இது பேச்சுக்குரிய விஷயமாகியுள்ளது. ஆனால் கிரிஷ்ஷுடன் இருக்கும் புகைப்படங்களை அவர் இன்னும் அகற்றவில்லை என்பதால், இந்த தகவல் உறுதியில்லை.

திருமண வாழ்கையில் பிரச்னைகள் ஏற்படுவது சாதாரணமெனினும், புகழ்பெற்ற நபர்களின் வாழ்க்கை எப்போதும் மக்கள் பார்வையில் இருப்பதால், இவ்வாறான செய்திகள் அதிகமாக பேசப்படும். சங்கீதா – கிரிஷ்ஷ் விவகாரம் எதை நோக்கி செல்கிறது என்பது காலமே பதிலளிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

 

இதையும் படிங்க: கணவரை இழந்த மேக்னா ராஜ் இரண்டாவது திருமணம் செய்யப்போகிறாரா! முழு விபரம் உள்ளே....