வசூலை வாரி அள்ளும் நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்.! 10 நாட்களில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா??
எடப்பாடிக்கு பல்கானா பதிலடி கொடுத்த செங்கோட்டையன்! தவெக சின்னத்தைப் பார்த்தால் நாடே அஞ்சும்! ஆண்ட கட்சி தான் ஆள வேண்டுமா? தவெக வின் அடுத்தக்கட்ட அதிர்வு!
தமிழக அரசியல் சூழலில் மாற்றத்தை நோக்கி நகரும் சூழலில், தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நாமக்கலில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு முக்கிய கருத்துகளை வலியுறுத்தினார். மாநில அரசியலில் புதிய அலை உருவாகி வருவதாக அவர் தெரிவித்தது கவனத்தை ஈர்த்தது.
செங்கோட்டையன் அதிமுகக்கு கடும் பதிலடி
நாமக்கல் மாவட்டத்தில் பேசிய செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்துகளுக்கு நேரடியாக பதிலளித்தார். அவர், “நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமி ‘பெரிய கட்சி நம்மிடத்தில் வந்துவிட்டது, கொடி அசைக்கிறது, பிள்ளையார் சுழி போட்டாச்சு’ என்றார். ஆனால் இப்போது அந்த சுழி மாற்றப்படுள்ளது. எல்லோரின் முதுகிலும் ஏறி சவாரி செய்யலாம் என்று சிலர் கனவு கண்டார்கள்,” என்று விமர்சித்தார்.
விஜய் முதலமைச்சராக வருவார்: செங்கோட்டையன்
அவர் மேலும், “மக்கள் சக்தி விஜய்யை தமிழ்நாட்டின் முதலமைச்சராக அமர வைக்கும். அந்த மக்கள் சக்தியை தடுக்க யாராலும் முடியாது,” என்று தன்னம்பிக்கையுடன் கூறினார்.
இதையும் படிங்க: எந்த கொம்பனாலும் இதை தடுக்க முடியாது! 2026 தேர்தலில் மே 5 ஆம் தேதி இது நடப்பது உறுதி.., அதிமுக EX MLA ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேட்டி.!
புதிய முகத்துக்கு மக்கள் எதிர்பார்ப்பு
தொடர்ந்து பேசிய அவர், “ஆண்ட கட்சிகளேதான் ஆட்சி செய்ய வேண்டுமா? மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காதா? நல்லாட்சியை வழங்கும் புதிய முகத்தை மக்கள் நீண்ட நாட்களாகவே எதிர்பார்த்தனர்; அந்த முகம் கிடைத்துவிட்டது,” என்றும் தெரிவித்தார்.
தவெக புதிய சின்னம் விரைவில்
தவெகக்கான சின்னம் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும், “அந்தச் சின்னத்தைப் பார்த்துவிட்டால் நாடே ஆச்சரியப்படவும் அஞ்சவும் செய்யும். அந்த சின்னத்தை வெல்வது எந்த இயக்கத்தாலும் இனி எளிதல்ல,” என்று அவர் விளக்கினார்.
இந்த உரையாற்றல் மாநில அரசியலில் புதிய விவாதத்தையும், தவெக உருவாக்கப் போகும் அடுத்த கட்ட அதிர்வையும் வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: வெற்றி நிச்சயம்! ஆண்டுக்கு ரூ.500 கோடி வருமானம்.... 2026 தேர்தலில் விஜய் தான் தமிழகத்தின் முதல்வர்! அடித்து அதிரடியாக பேசும் செங்கோட்டையன்.!!!