என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
தமன்னாவின் அந்த பாடல் மாதிரி இருக்காது.! ஆனா.. கூலி பாடல் குறித்து நடிகை பூஜா ஹெக்டே ஓபன் டாக்!

தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. ஆனால் அவர் நடித்த முதல் படம் அவருக்கு வெற்றியை தேடி தரவில்லை. பின்னர் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் முன்னணி பிரபலங்களுடன் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்த அவர் மீண்டும் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.
கூலி படத்தில் பூஜா ஹெக் டே
அவர் தற்போது சூர்யாவுடன் 'ரெட்ரோ' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மே 1ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் பூஜா ஹெக்டே விஜய்யின் ஜனநாயகன் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். அதுமட்டுமின்றி ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 'கூலி' படத்திலும் பாடல் ஒன்றிற்கு நடனமாடியுள்ளார்.
இதையும் படிங்க: பல நடிகர்கள் அரசியல்வாதியாக.. நான் இதையே விரும்புகிறேன்.! திமுக மேடையில் நடிகர் ரவி மோகன் பேச்சு!!
காவாலா பாடல் போல இருக்குமா?
இந்நிலையில் ரெட்ரோ படத்தின் புரமோஷனுக்காக பேட்டி அளித்த பூஜா ஹெக்டேவிடம், கூலி படத்தில் அவர் நடனமாடியிருக்கும் பாடல் தமன்னாவின் 'காவாலா' பாடல் போல இருக்குமா? என கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், இல்லை 'காவாலா' பாடல் போல இருக்காது. முற்றிலும் வேறுபட்ட ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளேன். தனித்துவமான வைப்பில் கண்டிப்பாக ரசிகர்கள் நன்றாக என்ஜாய் செய்வார்கள் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வருங்கால காதல் கணவருடன் குஷியாக ஆட்டம் போட்ட நடிகை அபிநயா.! கண்ணுப்பட வைக்கும் கியூட் புகைப்படங்கள்!!