வருங்கால காதல் கணவருடன் குஷியாக ஆட்டம் போட்ட நடிகை அபிநயா.! கண்ணுப்பட வைக்கும் கியூட் புகைப்படங்கள்!!

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட்டான திரைப்படம் நாடோடிகள். இப்படத்தில் சசிகுமாரின் தங்கையாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் அபிநயா. சிறுவயதிலிருந்தே இவருக்கு காது கேளாது மற்றும் வாய் பேச முடியாது.
ஆனாலும் அவர் தனது தன்னம்பிக்கையால் மிகவும் கனகச்சிதமாக நடித்து சிறந்த நடிகையாக வலம் வந்தார். தொடர்ந்து அபிநயா ஆயிரத்தில் ஒருவன், ஈசன், வீரம், பூஜை,மார்க் ஆண்டனி உள்ளிட்ட பல படங்களில் சிறப்பாக நடித்திருந்தார். மேலும் அவர் மலையாளத்தில் நடித்திருந்த பணி திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்றது. இதற்கிடையில் அபிநயா நடிகர் விஷாலை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
இந்த நிலையில் நடிகை அபிநயா தனது நண்பரை 15 வருடங்களாக காதலிப்பதாக தெரிவித்திருந்தார். பின்னர் தனது காதலருடன் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததையும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகை அபிராமிக்கு மெஹந்தி விழா நடைபெற்றுள்ளது. அதில் தனது காதலரும், வருங்கால கணவருமான கார்த்திக்குடன் நெருக்கமாக மிகவும் சந்தோஷமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.
இதையும் படிங்க: ஓ சோனா... குட் பேட் அக்லியில் கியூட்டாக மாஸ் காட்டிய நடிகை சிம்ரன்.! ரசிகர்களுக்காக பகிர்ந்த வீடியோ!!
இதையும் படிங்க: அஜித்தின் குட் பேட் அக்லிக்கு வந்த சோதனை.! படக்குழுவிற்கு இளையராஜா நோட்டீஸ்!!