13 வருட காதல்.! நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கு திருமணம்.! மாப்பிள்ளை யார் பார்த்தீங்களா!!
பல நடிகர்கள் அரசியல்வாதியாக.. நான் இதையே விரும்புகிறேன்.! திமுக மேடையில் நடிகர் ரவி மோகன் பேச்சு!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். 'ஜெயம்' படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமான இவர் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். ரசிகர்களால் ஜெயம் ரவி என அழைக்கப்பட்ட இவர் சில காரணங்களால் தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டார்.
புதிய படத்தில் ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகி வரும் 'கராத்தே பாபு' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் 'பராசக்தி' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார்.
நடிகனாக இருக்கவே விருப்பம்
இந்த நிலையில் ரவி மோகன், முதல்வர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்பொழுது பேசிய அவர், முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நாங்கள் எல்லோரும் அவர் எப்பொழுதும் உடல் நலத்துடன், ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு பிராத்தனை செய்துகொள்கிறோம். அவர் சினிமாவை நெருக்கமாக கொண்டவர். சினிமாவில் பல நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
இதையும் படிங்க: ஓ சோனா... குட் பேட் அக்லியில் கியூட்டாக மாஸ் காட்டிய நடிகை சிம்ரன்.! ரசிகர்களுக்காக பகிர்ந்த வீடியோ!!
மேலும் இங்கு நிறைய அரசியல்வாதிகள் உள்ளனர். நிறைய நடிகர்கள் அரசியல்வாதிகளாக மாறி இருக்கிறார்கள். ஆனால் நான் எப்போதும் போல நடிகனாகவே இருக்க விரும்புகிறேன் என்று நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அஜித்தின் குட் பேட் அக்லிக்கு வந்த சோதனை.! படக்குழுவிற்கு இளையராஜா நோட்டீஸ்!!