சினிமா

விஜயின் சர்காருடன் மோதும் பிரபல நடிகர்!!!

Summary:

actor-vijay-and-vijayantony-movie-release-in-same-day

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் தான் சர்க்கார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மெர்சல் படத்தின் போதே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய இருந்ததால் தற்போது இந்த படம் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. அதனால் இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என இயக்குனர் முருகதாஸ் கூறியுள்ளார்.

இந்த சர்கார் படம் வரும் தீபாவளிக்கு தல அஜித்தின் விஸ்வாசம், சூர்யாவின் NGK ஆகிய படங்களோடு மோத இருந்தது. ஆனால் விசுவாசம், NGK ஆகிய இரண்டு படங்களில் ரிலீஸ் தள்ளி போய் விட்டதால் சர்கார் மட்டும் சோலோவாக வெளியாக இருந்தது.

அதன் பின்னர் தனுஷ் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் என்னை நோக்கி பாயும் தோட்டா தீபாவளிக்கு வெளிவர உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இதனையடுத்து தற்போது இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள திமிரு பிடிச்சவன் படம் இயக்குனர் கணேஷா இயக்குகிறார்.

.இந்தப் படத்தின் கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இந்தப்படத்தில் விஜய் ஆண்டனி மற்றும் நிவேதா பெத்துராஜ் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனிக்கு போலீஸ் வேடத்தில் நடிப்பது  இதுவே முதல் முறை ஆகும். இந்தப் படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்து வருகிறது. தீபாவளி ரேஸில் இணைய இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

 


Advertisement