அடப்பாவமே.. விபத்தில் சிக்கி இளம் நடிகரின் கால்கள் முறிவு; கிண்டலடித்து வீடியோ வெளியிட்ட நடிகை.!! கொந்தளிக்கும் ரசிகர்கள்..!!

அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் நவ்தீப், நெஞ்சில், அஜித்துடன் ஏகன், சொல்ல சொல்ல இனிக்கும் உட்பட பல படத்தில் நடித்துள்ளார்.
இவர் இறுதியாக வீரமாதேவி என்ற திரைப்படத்தில் தமிழில் நடித்திருந்தார். தெலுங்கு மொழியில் வெளியான பல்வேறு படங்களில் நடித்துள்ள நவ்தீப், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி இருக்கிறார்.
இந்நிலையில், தான் விபத்தில் சிக்கி கால்களை உடைத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார். அவரின் உடல்நலம் குறித்து விசாரிக்க சென்ற நடிகை தேஜஸ்வி, நவ்தீப்பின் கால்களில் மாவுக்கட்டு உள்ள புகைப்படத்தை வெளியிட்டார்.
மேலும் கிண்டலடித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதனால் அவர் மீது நடிகரின் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர். அவர் எந்த விபத்தில் சிக்கி கால்களை உடைத்துக்கொண்டார் என்ற தகவல் தெரியவில்லை.