காவாலா பாட்டு எல்லாம் ஓரம் போ!! வந்துட்டா மோனிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் பாடல்.
பிரபல ரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்! சோகத்தில் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல்!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகி மாபெரும் சூப்பர்ஹிட்டான பாட்ஷா படத்தில் நடித்திருந்தவர் பிரபல தெலுங்கு நடிகர் நர்சிங் யாதவ். இவர் விஷால் நடித்த பூஜை, விக்ரம் நடிப்பில் வெளிவந்த ராஜபாட்டை, ஆட்டநாயகன், விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த நர்சிங் யாதவ் நீண்ட காலமாக அதற்கான சிகிச்சை எடுத்து வந்துள்ளார் .
ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த நர்சிங் யாதவ் தற்போது உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.