சினிமா

தமிழ் திரையுலகில் அடுத்த துயரம்! பிரபல பழம்பெரும் நடிகர் மரணம்! சோகத்துடன் திரையுலகினர் இரங்கல்!!

Summary:

நடிகரும், தயாரிப்பாளருமான ஜி.ராமசந்திரன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று அத

நடிகரும், தயாரிப்பாளருமான ஜி.ராமசந்திரன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் களத்தூர் கண்ணம்மா, நாட்டுப்புற பாட்டு, எட்டுபட்டி ராசா, வீர தாலாட்டு, ராஜாதி ராஜா, மனுநீதி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜி.ராமச்சந்திரன். அதுமட்டுமின்றி ஜி.ஆர். கோல்டு பிலிம்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய அவர் மனுநீதி, சவுண்ட் பார்ட்டி, காசு இருக்கணும், எங்க ராசி நல்ல ராசி, காதலி காணவில்லை உள்ளிட்ட பல படங்களையும் தயாரித்துள்ளார்.

நடிகர் ஜி.ராமச்சந்திரன் தமிழ் மட்டுமின்றி பல்வேறு கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.இவரது மனைவி ஆர்.பி. பூரணி. சமீபத்தில்தான் மாரடைப்பு காரணமாக அவர் காலமானார். மனைவியின் மரணத்திற்கு பிறகு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த ஜி.ஆர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் மாங்காட்டில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இன்று இறுதி சடங்குகள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. பழம்பெரும் நடிகரும், தயாரிப்பாளருமான ஜி. ராமச்சந்திரன் மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள்,  ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement