சினிமா

அமிதாப் பச்சனை தொடர்ந்து அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா உறுதி! ஐஸ்வர்யா ராயின் நிலை என்ன? வெளியான ஷாக் தகவல்!

Summary:

Abishek bacchan attack by corono virus

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் அமிதாப்பச்சன். இவரை தெரியாதவர்களே இல்லை எனும் சொல்லுமளவிற்கு அவர் இந்தியா முழுவதும் பெருமளவில் பிரபலமடைந்துள்ளார்.

இந்நிலையில் சிலநாட்களாக நடிகர் அமிதாப்பச்சனுக்கு   கொரோனா பாதிப்பிற்கான அறிகுறிகள் இருந்த நிலையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்  முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர் மும்பையில்  நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். 

இந்நிலையில் எம்.பி ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்  ஐஸ்வர்யா ராய், ஜெயா பச்சன் ஆகியோருக்கு கொரோனா நெகடிவ் என உறுதியாகியுள்ளது. 

இதுகுறித்து அபிஷேக் பச்சன் தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில்,  இன்று எனது தந்தைக்கும் எனக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவருக்கும் லேசான அறிகுறிகள் இருந்ததால், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளோம். அனைத்து அதிகாரிகளுக்கும் எங்களுக்கு கொரோனா இருப்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளோம். மேலும் எனது குடும்பத்தினர் மற்றும் பணியாளர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனைவரும் அமைதியாக இருங்கள், பதற்றம் அடைய வேண்டாம் என பதிவிட்டுள்ளார். 


Advertisement