சினிமா

அஜித் - முருகதாஸ் கூட்டணி எப்போது? இயக்குனர் முருகதாஸ் ஓபனாக கூறிய பதில் - நெகிழ்ச்சியில் தல ரசிகர்கள்

Summary:

A. R. Murugathas ajith

ஏ. ஆர். முருகதாஸ் ஒரு சிறந்த இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களை கொண்டவர். இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் தல அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இவர் இயக்கிய ரமணா திரைப்படம், நடிகர் விஜயகாந்தின் முக்கியத் திரைப்படமாக அமைந்ததுடன், அதன் புரட்சிகரமான கருத்துக்களுக்காக பெரிதும் பாராட்டப்பட்டது. மேலும் அந்த படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது.

அதுமட்டுமின்றி இவர் நடிகர் சூர்யாவை வைத்து இரண்டு படங்களிலும் நடிகர் விஜயை வைத்து நான்கு படங்களையும் இயக்கியுள்ளார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தர்பார் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் பிரபல வார இதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்த போது தர்பார் படத்தை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை கூறியுள்ளார். மேலும் அவரிடம் தல அஜித்துடன் எப்போது கூட்டணி என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் இன்று நான் இந்த உயரத்தை அடைந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைய கூடிய ஒரே மனிதர் தல அஜித் என கூறியுள்ளார். மேலும் விரைவில் எங்களது கூட்டணி அமையும் எனவும் கூறியுள்ளார். இதனால் தல ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 


Advertisement