பல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்! இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த மருத்துவர்! - TamilSpark
TamilSpark Logo
உலகம் மருத்துவம்

பல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்! இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த மருத்துவர்!


பாகிஸ்தான் நாட்டில் 22 வயது நிரம்பிய இளம்பெண் அஸ்மாட் ஜொன்ஜோஎன்பவருக்கு கடந்த சில வாரங்களாக பல் வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பல் வலியை சரி செய்வதற்கு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கடந்த 18 ம் தேதியன்று சென்றுள்ளார்.

இவர் மருத்துவமனைக்கு சென்ற சில மணி நேரத்தில் அந்த இளம்பெண்ணின் உடல் நிலையானது மோசமடைந்து வருவதாக அவரது தாயாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்த தாயார் மருத்துவமனைக்கு விரைந்து தனது மகள் குறித்து விசாரித்துள்ளார். அங்குள்ள ஊழியர்கள் இளம்பெண்ணை சிகிச்சைக்காக வேறு மருத்துவனைக்கு அழைத்து சென்றதாக கூறியுள்ளனர். 

இதனையடுத்து அவரது தயார் அந்த இளம்பெண்ணை தேடி வந்த நிலையில், அவர் சடலமாக கிடந்துள்ளார். அவரின் மரணம் குறித்து கருத்து தெரிவித்த மருத்துவர்கள். ஆண்டிபயாடிக் ஊசியின் எதிர்வினை காரணமாக அவர் இறந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய படம்

இதனையடுத்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இளம்பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் மேற்கொண்ட பிரேத பரிசோதனையில் இளம்பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனை அறிந்த மருத்துவர்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மருத்துவமனை ஊழியர்கள் ஷாஜீப், வாலி மற்றும் அமீர் ஆகியோர் தான் இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. 


Advertisement


ServiceTree
தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo