உலகம்

மாதந்தோறும் தவறாமல் வந்த மாதவிடாய்! கர்ப்பமாக இருப்பதை உணர்ந்த ஒருமணி நேரத்திலேயே இளம்பெண்ணுக்கு காத்திருந்த ஆச்சர்யம்!

Summary:

Women claims pregnant just one hour before giving birth

இந்தோனேசியா வெஸ்ட் ஜாவா அருகே தாஸிக்மலயா பகுதியை சேர்ந்தவர் ஹெனி நுரேனி. 28 வயது நிறைந்த இவருக்கு ஏற்கனவே இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் அவர், தான் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்த ஒரு மணி நேரத்திலேயே ஆண்  குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்த  சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, எனக்கு கடந்த 9 மாதங்களாகவே மாதவிடாய் சரியாக வந்து கொண்டிருந்தது. மேலும் எனக்கு, எனது உடம்பில் எந்த மாற்றமும் தெரியவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் திடீரென எனது வயிற்றில் ஒரு பக்கத்தில் ஏதோ அசைவது போல உணர்ந்தேன். மேலும்  வயிற்றில் எனக்கு சிறு வலி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து எனது தந்தை வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். பின்னர் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மருத்துவர்களை வீட்டிற்கு வரவழைத்தோம். அவர்கள் வந்த சிறிது நேரத்திலேயே எனக்கு ஆண்குழந்தை பிறந்தது. மேலும் குழந்தை பிறப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்பு கூட தனக்கு இரத்தபோக்கு இருந்ததாகவும் ஹெனி நுரேனி கூறியுள்ளார். 

இத்தகைய அற்புத நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பலரும் பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து மகப்பேறு மருத்துவர் ருஸ்வானா என்பவர்  கூறுகையில், கர்ப்பமாக இருக்கும் 25 ஆயிரம் பேரில் ஒருவருக்கு இவ்வாறு நேரலாம். மேலும் அவர் உடல் எடை குறைந்திருக்கலாம். அதனாலும் அவர் கர்ப்பமாக இருப்பதை உணராமல் இருக்கலாம் என கூறியுள்ளனர்.


Advertisement