கனமழை காரணமாக அமர்நாத் யாத்திரை இடைநிறுத்தம்! மண் சரிவில் அடித்து செல்லப்பட்ட பக்தர்கள்! வெளியான பதறவைக்கும் வீடியோ.



amarnath-yatra-suspended-due-to-landslides-in-baltal

 ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கந்தர்பால் மாவட்டம் பால்டால் பகுதியில் கனமழை காரணமாக அமர்நாத் யாத்திரை இன்று வியாழக்கிழமை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பெய்துவரும் மழையால், மலைப்பாதையில் மண்சரிவுகள் உருவாகியுள்ளன.

இதன் காரணமாக, யாத்திரை பாதையில் பயணித்த இரண்டு பக்தர்கள் சேற்று நீரில் அடித்துச் செல்லப்படுவதைக் காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதிர்ஷ்டவசமாக, அருகிலிருந்த மற்ற யாத்ரீகர்கள் அந்த இருவரையும் உடனடியாக மீட்டு பாதுகாப்பாக கொண்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பேரிடர் நிலைமையை சமாளிக்க தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் படை (SDRF) மற்றும் எல்லை சாலை அமைப்புப் பிரிவினர் (BRO) இணைந்து பணியாற்றி வருகின்றனர். பால்டால் பாதையில் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: நண்பருக்கு வாடகைக்கு கொடுத்த வீடு! வீடு முழுக்க பீர் பாட்டில், மலம், சிறுநீர் பைகள்! வீட்டையே தலைகீழாக மாற்றிய நண்பர்! பேரதிர்ச்சி சம்பவம்...

மேலும், ரயில்பத்ரி பகுதியில் ஏற்பட்ட பெரிய மண்சரிவால் மூன்று பக்தர்கள் காயமடைந்துள்ளதாகவும், அப்பகுதியில் மக்கள் மத்தியில் பதட்டம் நிலவுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பிரம்மாண்ட ஷாப்பிங் மாலில் திடீரென பற்றி எரியும் தீ ! 50 பேர் உடல் கருகி பலி... வெளியான அதிர்ச்சி வீடியோ!