நண்பருக்கு வாடகைக்கு கொடுத்த வீடு! வீடு முழுக்க பீர் பாட்டில், மலம், சிறுநீர் பைகள்! வீட்டையே தலைகீழாக மாற்றிய நண்பர்! பேரதிர்ச்சி சம்பவம்...



uk-couple-house-damaged-by-old-friend

இங்கிலாந்தின் வார்விக்ஷயர் பகுதியிலுள்ள நியூனேட்டனைச் சேர்ந்த கிறிஸ் கான்சிடைன் (70) மற்றும் அவரது மனைவி சாண்ட்ரா (58) ஆகியோர், 2018ஆம் ஆண்டு தங்களது மகளுக்காக இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீடு ஒன்றை வாங்கினர்.

அப்போது, உதவி தேவைப்படும் ஒரு பழைய நண்பருக்கு, அந்த வீட்டை தற்காலிகமாக, வாரத்திற்கு வெறும் £30  (இந்திய மதிப்பில் ₹3,400) வாடகைக்கு தந்தனர். ஆனால், அந்த நபர் 7 ஆண்டுகளாக ஒரு ரூபாய் கூட செலுத்தாமல், வீடையே குப்பையாக மாற்றியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் அந்த வீட்டைப் பார்வையிட்ட தம்பதியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மூன்று ஆயிரம் பீர் கேன்கள், சிறுநீரும் மலமும் நிரம்பிய பைகள், என வீடு முழுவதும் அராஜகமாக காணப்பட்டது. ஓவியம் வரைவதற்காகவே வீடு தேவை என கூறியதால் அனுமதி அளித்தோம்.  நண்பர் என்பதற்காக நம்பிக்கையுடன் உதவினோம் ஆனால் அவர் எங்கள் நம்மிகையை காப்பாற்றவில்லை என்று வருத்தப்பட்டு கூறினார் கிறிஸ்.

இதையும் படிங்க: பிரம்மாண்ட ஷாப்பிங் மாலில் திடீரென பற்றி எரியும் தீ ! 50 பேர் உடல் கருகி பலி... வெளியான அதிர்ச்சி வீடியோ!

தற்போது, அந்த வீடினை பழையபடி சீரமைப்பதற்காக தம்பதியர் கடுமையாக போராடி வருகிறார்கள். அவர்களது மகள், வீடு சுத்தம் செய்யவும், புனரமைக்கும் செலவுக்காக GoFundMe தளத்தில் நிதி சேகரிக்க முயற்சி மேற்கொண்டுள்ளார்

இதையும் படிங்க: Video : விஷப் பாம்பை கழுத்தில் போட்டுக் கொண்டு ரீல்ஸ் எடுத்த நபர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி! பதறவைக்கும் வீடியோ..