Video : விஷப் பாம்பை கழுத்தில் போட்டுக் கொண்டு ரீல்ஸ் எடுத்த நபர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி! பதறவைக்கும் வீடியோ..

மத்தியப்பிரதேசத்தில் உள்ள குணா மாவட்டத்தின் பர்பத்புரா கிராமத்தில் நடந்த ஒரு சோகமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாம்பு பிடிப்பாளரான தீபக் மஹாவர், தனது கழுத்தில் பாம்பை மாட்டி ரீல் வீடியோ எடுத்தபோது, விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழந்தார்.
தீபக் பொதுவாக பாம்புகளைப் பிடித்து சமூக ஊடகங்களில் வீடியோக்கள் பதிவேற்றும் பழக்கத்தில் இருந்தவர். சம்பவ நாளில், சிலிபுரா கிராமத்தில் பாம்பு இருப்பதாக தகவல் வந்ததையடுத்து, அவர் அதனை பிடித்து, பாம்பை கழுத்தில் மாட்டிக்கொண்டு தனது மகனை பள்ளியில் அழைத்து வர பைக்கில் சென்றுள்ளார்.
அப்போது, பாம்பு திடீரென அவரது கையை கடித்துள்ளது. நண்பரின் உதவியுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தீபக், பின்னர் வீட்டிற்கு திரும்பினார். ஆனால் அதே இரவில் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதையும் படிங்க: லண்டனில் எஸ்கலேட்டரில் இந்திய வாலிபர் செய்த காரியத்தை பாருங்க! இந்தியர்கள் எப்போதும் இப்படித்தான்! ஷாக்கான மக்கள்... வைரலாகும் வீடியோ!
தீபக் பாம்புடன் பைக்கில் பயணம் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அவர் பாம்புடன் விளையாடும் செயலும், பாம்பின் வாயை கையால் தொடுவதும் தெளிவாக காணப்படுகிறது.
இந்த சம்பவம், விஷப்பாம்புகளை அலட்சியமாக அணுகக் கூடாது என்பதற்கான கனமான எச்சரிக்கையாக அமைந்துள்ளது. மேலும், சினிமா போன்று ரீல் உருவாக்கும் ஆசை, வாழ்க்கையை அழிக்க கூடியது என்பதும் இந்த நிகழ்வால் நிரூபிக்கப்படுகிறது.
ज़हरीला कोबरा गले में डालकर बाइक चलाना एक सर्पमित्र के लिए घातक साबित हुआ. सांप के डंसने से सर्पमित्र की मौत हो गई. मृत्यु से पहले, जब वह सांप को गले में डालकर घूम रहा था, तब किसी ने उसका वीडियो बना लिया, जो अब तेजी से वायरल हो रहा है.
पूरी ख़बर: https://t.co/2yV9XoDjvX#Cobra… pic.twitter.com/qBedXkFDQG
— AajTak (@aajtak) July 16, 2025
இதையும் படிங்க: Video : உலகம் முழுவதும் ஒரே நாளில் ட்ரெண்டான 11 வயது சிறுவன்! அப்படி என்னதான் செஞ்சான்னு நீங்களே பாருங்க! இணையத்தை கலக்கும் வீடியோ....