AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
அட.. இந்த ஜோடி அம்சமா இருக்கே.! வளர்ந்து வரும் இளம் நடிகருடன் இணையும் பிரியங்கா மோகன்.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான 'டாக்டர்' படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை பெரிதும் கவர்ந்த அவர் தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான், தனுஷின் 'கேப்டன் மில்லர், ரவி மோகனுக்கு ஜோடியாக பிரதர் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
நடிகை பிரியங்கா மோகன் தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் 'கோல்டன் ஸ்பாரோ' பாடலுக்கு நடனமாடியிருந்தார். மேலும் அவர் பவன் கல்யாண் நடிக்கும் 'ஓஜி' என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது வளர்ந்துவரும் இளம்நாயகனான கவினுக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த திரைப்படத்தை கனா காணும் காலங்கள், கட்சி சேர பாடல் ஆகியவற்றை இயக்கிய இயக்குனர்
கென் ராய்சன் இயக்கவுள்ளார். மேலும் இதனை திங் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு ஆஃப்ரோ இசையமைக்கிறார். இந்நிலையில் படத்தின் பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றுள்ளது. அந்த பூஜை விழாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
— Kavin (@Kavin_m_0431) July 16, 2025
இதையும் படிங்க: அட.. இந்த விஷயம் தெரியுமா?? கில்லி படத்தில் நடிகர் விமல் பாடியிருக்காரா!! அதுவும் எந்த பாடலில் தெரியுமா??
இதையும் படிங்க: கட்டப்பா பாகுபலியை கொல்லாமல் இருந்திருந்தால்.. 10 ஆண்டுகளுக்குப் பிறகு பல்வாழ் தேவன் சொன்ன ட்விஸ்ட் பதிலை பார்த்தீர்களா!!