கட்டப்பா பாகுபலியை கொல்லாமல் இருந்திருந்தால்.. 10 ஆண்டுகளுக்குப் பிறகு பல்வாழ் தேவன் சொன்ன ட்விஸ்ட் பதிலை பார்த்தீர்களா!!
கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் ராணா டகுபதி நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படம் பாகுபலி. பான் இந்தியா திரைப்படமான இதில் அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், நாசர், சத்யராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இரு பாகங்களாக வெளிவந்த இத்திரைப்படம் செம ஹிட்டாகி ரூ.1800 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் பாகுபலி திரைப்படம் வெளிவந்து பத்து ஆண்டுகள் நிறைவானதையொட்டி அண்மையில் படக்குழு பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளனர். மேலும் பாகுபலியின் இரு பாகங்களையும் இணைத்து ஒரே பாகமாக ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் பாகுபலி படத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ தள பக்கத்தில் 'கட்டப்பா பாகுபலியை கொல்லவில்லை என்றால்? என்ன நடந்திருக்கும்' என கேள்வியெழுப்பியுள்ளனர். அதற்கு வில்லன் பல்வாழ் தேவனாக நடித்த நடிகர் ராணா "நான் அவரை கொன்றிருப்பேன்" என பதில் அளித்துள்ளார். அதற்கு மற்றொரு ரசிகர் பாகுபலியின் மகனையே உங்களால் கொல்லமுடியவில்லையே? நீங்கள் எப்படி பாகுபலியை கொன்று இருப்பீர்கள் என கிண்டலாக பதிவிட்டுள்ளனர். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
I would have killed him instead 😡🥂 https://t.co/8oe6qUZP9l
— Rana Daggubati (@RanaDaggubati) July 16, 2025
இதையும் படிங்க: முத்துவுக்கு மீனா கொடுத்த சர்ப்ரைஸ்! ஏக்கத்தில் முத்து செய்த காரியத்தை பாருங்க! சிறக்கடிக்க ஆசை புரோமோ..
இதையும் படிங்க: லியோ வெற்றியால் டபுள் மடங்கு உயர்வு.! கூலி படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா??