முத்துவுக்கு மீனா கொடுத்த சர்ப்ரைஸ்! ஏக்கத்தில் முத்து செய்த காரியத்தை பாருங்க! சிறக்கடிக்க ஆசை புரோமோ..



siragadikka-aasai-latest-twist-meena-muthu-emotional-scene

 சிறகடிக்க ஆசை சீரியல் நாள்தோறும் ரசிகர்களை அதிகம் கவரும் வகையில் தொடர்ந்து திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. சமீபத்திய எபிசோடில், முத்துவின் வீடு வரை வந்த மீனா, சமையல் செய்து முடித்த பிறகு ஸ்ருதி அறையில் மறைந்திருக்க, முத்து பரிதாபமாக அவளைத் தேடும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல், முத்து மற்றும் மீனாவை மையமாகக் கொண்டு கதையை நகர்த்தி, ரசிகர்களின் மனதைப் பறிக்கிறது. இவர்கள் இருவரையும் சுற்றி நகரும் சம்பவங்கள், ஒவ்வொரு நாளும் அதிக எதிர்பார்ப்பை உருவாக்குகின்றன.

மூடிய ரகசியங்களை வெளிப்படுத்தும் கட்டத்துக்குள் ரோகினியின் உண்மை தெரிந்து வரும் சூழலில், ஸ்ருதி தனது அம்மாவிடம் பணம் கேட்டு ரோகினியிடம் இருந்து தப்ப முயல்கிறாள். இந்த தகவல் ரவிக்குத் தெரிந்ததும், வீட்டில் மீண்டும் குழப்பம் அதிகரிக்கிறது.

இதையும் படிங்க: முத்து மீனாவை நேருக்கு நேர் சந்தித்து இருவரும் கண்ணாலையே பேசிக்கொள்ளும் ரொமான்டிக் காட்சி! சிறக்கடிக்க ஆசை ப்ரோமோ....

அதிலும் முக்கியமாக, மீனா தங்கைக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் முத்துவிடம் மறைக்கப்பட்டதை அறிந்த அவர், அவளைக் கோபத்தில் அம்மா வீட்டிற்கு அனுப்புகிறார். ஆனாலும், குடிபோதையில் கூறிய வார்த்தைகள் இருவரையும் பாதித்த நிலையில், பின் மனம் மாறி இருவரும் ஒன்றாகச் சேர்ந்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியாக்கியுள்ளது.

---

இதையும் படிங்க: முத்துவால் அம்மா வீட்டுக்கு போன மீனா! வீட்டில் விஜயா படும் அவஸ்தை! சிறக்கடிக்க ஆசை ரணகள புரோமோ...