அட.. இந்த விஷயம் தெரியுமா?? கில்லி படத்தில் நடிகர் விமல் பாடியிருக்காரா!! அதுவும் எந்த பாடலில் தெரியுமா??

தமிழ் சினிமாவில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய திரைப்படம்தான் கில்லி. இதில் நடிகர் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார் மேலும் அவருக்கு ஜோடியாக ஹீரோயினாக திரிஷா நடித்திருந்தார். கில்லி திரைப்படத்தை இயக்குனர் தரணி இயக்கினார்.
இதில் விஜய் கபடி வீரராக நடித்திருப்பார். கில்லி திரைப்படம் நடிகர் விஜய்யின் திரைவாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஏற்கனவே ரசிகர்களால் பெருமளவில் கொண்டாடப்பட்ட இத்திரைப்படம் மீண்டும் ரீ ரீலீசாகி வசூலை அள்ளியது. கில்லி படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் தற்போதும் ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் சில வரிகளை நடிகர் விமல் பாடியிருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. அதாவது கொக்கர கொக்கரக்கோ என்ற பாடலில் இடம் பெற்ற தூம் ஷக் தூம் தூம் தூம் ஷக் வரிகளை தான் அவர் பாடியிருந்தாராம். மேலும் விமல் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தும் உள்ளார்.
இதையும் படிங்க: கட்டப்பா பாகுபலியை கொல்லாமல் இருந்திருந்தால்.. 10 ஆண்டுகளுக்குப் பிறகு பல்வாழ் தேவன் சொன்ன ட்விஸ்ட் பதிலை பார்த்தீர்களா!!
இதையும் படிங்க: முத்துவுக்கு மீனா கொடுத்த சர்ப்ரைஸ்! ஏக்கத்தில் முத்து செய்த காரியத்தை பாருங்க! சிறக்கடிக்க ஆசை புரோமோ..