அப்பா சொன்ன ஒரு வார்த்தை! தாலியை குமரவேல் மூஞ்சில் தூக்கி வீசிய அரசி! பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல், பரபரப்பான திருப்பங்களால் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இப்போது வெளியாகியுள்ள புதிய ப்ரோமோவில், அரசி தன்னுடைய தாலியை கழட்டி பாண்டியனுடன் செல்லும் காட்சி பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தன் மணவாழ்க்கையை தியாகம் செய்து பாண்டியனுக்காக வாழ்க்கையில் புதிய முடிவுகளை எடுக்க தயார் ஆன அரசி, குடும்பத்தில் எதிர்ப்புகள் வந்தாலும் தன் முடிவில் உறுதியுடன் இருந்தார். குமரவேலின் தந்திரங்களில் சிக்கிய அரசி, ஒரு கட்டத்தில் அவரை திருமணம் செய்துக் கொள்கிறார். ஆனால் நாளுக்கு நாள் அரசியை ஒரு பகடைகாயாக பயன்படுத்தும் குமரவேலின் நடத்தை, அரசியின் மனதைக் மாற்றுகிறது.
இதையடுத்து, சண்டையின் போது உண்மையை வெளிப்படையாக கூறும் அரசிக்கு மீனா மற்றும் ராஜீவின் ஆதரவும் கிடைக்கிறது. கடைசியில் பாண்டியன் வீட்டிற்கு அழைக்க, தன் கழுத்தில் இருந்த தாலியை கழட்டி, அரசி தீர்மானமாக வெளியேறுகிறார்.
இதையும் படிங்க: குடும்பத்தில் நடந்த கலவரம்.. அவன் ஏன் புருஷன் இல்லை! உண்மையை போட்டு உடைக்கும் அரசி! பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பான திருப்பங்களுடன் உள்ள புரோமோ..
இதனை பார்த்த குமரவேல், மனதளவில் முற்றிலும் உடைந்து போவது போல் ப்ரோமோ முடிகிறது. இது தொடரும் அத்தியாயத்தில் எதை காட்டப்போகிறது என்பதற்கான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.
இதையும் படிங்க: வில்லனை கதறவிட்ட அரசி! இதுதான் என் நோக்கம்! கோவத்தில் என்ன செய்கிறார் பாருங்க! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ...