சற்றுமுன்.. பயிர்க்கடன் தள்ளுபடி...! பேரவையில் வெளியிட்ட அமைச்சர்..!!!



farm-loan-waiver-mrk-paneerselvam-minister-gandhiraj

தமிழக சட்டமன்றப் பேரவையில் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக திமுக சார்பில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் காரசாரமாக கேள்வி எழுப்பினார். தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட ரூ.21,000 கோடி கடனை எப்போது முழுமையாக தள்ளுபடி செய்யப் போகிறீர்கள் என அவர் வினவினார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உடனடி நடவடிக்கை தேவை என்றும் வலியுறுத்தினார்.

ரூ.21,000 கோடி கடன் எப்போது தள்ளுபடி?

பேரவையில் பேசிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்ட ரூ.21,000 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக அரசிடம் விளக்கம் கேட்டார். விவசாயிகள் எதிர்கொள்ளும் பொருளாதார சுமையை கருத்தில் கொண்டு, நிலுவையில் உள்ள கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: 1969 மேட்டரை இழுத்த CM விஜய்..! மலிவான அரசியல் நாங்க செய்யல.. வைரலாகும் வீடியோ..!!!

14.43 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்

இதற்கு பதிலளித்த அமைச்சர் காந்திராஜ், ஆட்சி அமைந்த மூன்று மாதங்களிலேயே ரூ.6,000 கோடி வரையிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் மாநிலம் முழுவதும் 14.43 லட்சம் விவசாயிகள் ஏற்கனவே பயனடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

விவசாயிகளுக்கான திட்டங்கள் தொடரும்

அரசின் நலத்திட்டங்கள் தொடர்ந்து விவசாயிகளை சென்றடையும் என்றும் அமைச்சர் காந்திராஜ் உறுதியளித்தார். ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட கடன் தள்ளுபடி நடவடிக்கைகள் மூலம் பெருமளவிலான விவசாயிகள் நிவாரணம் பெற்றுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

இதனிடையே, சட்டப்பேரவையில் எழுந்த இந்த விவாதம் மூலம் விவசாயிகளின் கடன் சுமை மற்றும் அரசின் வாக்குறுதிகள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன. முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான அரசின் அடுத்தகட்ட முடிவை விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: குறுக்க புகுந்து இவங்க தான் கெடுத்துட்டான்கே.... திமுக ரகுபதியின் வினோத பேச்சை கேட்டு சிரிப்பை அடக்க முடியாமல் தவித்த CM விஜய்..! வைரலாகும் வீடியோ..!!!