ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் சூப்பர் ஸ்டாரின் கூலி படத்தின் கதை இதுதானா?? இணையத்தில் கசிந்த தகவல்!!



Story of the movie Coolie leaked in internet

தமிழ் சினிமாவில்  முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கூட்டணியில் இணைந்து உருவாகியுள்ள திரைப்படம்தான் கூலி. இந்த படத்தில் அமீர்கான், சத்யராஜ், நாகர்ஜுனா, பகத் பாசில், சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

 சூப்பர் ஸ்டாரின் கூலி 

கூலி படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அவரது இசையில் உருவான மோனிகா பாடல் அண்மையில் வெளியாகி  நல்ல வரவேற்பு பெற்று ட்ரெண்டானது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: லியோ வெற்றியால் டபுள் மடங்கு உயர்வு.! கூலி படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா??

Coolie

கதை இதுதானா??

இதற்கிடையில் கூலி படத்தின் கதை லீக்காகியுள்ளதாக தகவல்கள் உலாவருகிறது. அதன்படி ரஜினிகாந்த் ஒரு பெரிய கேங்க்ஸ்டராக இருப்பார். பின் ஒரு கட்டத்தில் தனது தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சி செய்கிறார். அதற்காக தனது எதிரிகளை பழிவாங்கிவிட்டு, பின்னர் புதிய வாழ்க்கையை தொடங்குகிறார். இதனை லோகேஷ் தனது ஸ்டைலில் ஆக்ஷன் கலந்து உருவாக்கி இருப்பார் என பரவி வருகிறது

இதையும் படிங்க: அட.. இந்த படமெல்லாமா!! ஓடிடியில் இந்த வாரம் ரிலீசாகும் புதிய தமிழ் படங்கள்.! என்னென்ன பார்த்தீங்களா!!