விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி.! இன்று மாலை ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.! வெளிவந்த அறிவிப்பு!!



Vijay Sethupathi Thalaivan Thalaivi movie trailer announcement

மக்கள் நாயகன் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தலைவன் தலைவி. விஜய் சேதுபதியின் 52 வது படமான இதனை பசங்க, வம்சம், கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை, எதற்கும் துணிந்தவன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக நடிகை நித்யா மேனன் நடித்துள்ளார்.

மேலும் அவர்களுடன் யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது. மேலும் தலைவன் தலைவி திரைப்படம் வரும் 25ம் தேதி ரிலீசாக உள்ளது.

vijay sethupathi
இப்படத்தின் முதல் பாடலாக வெளியான பொட்டல மொட்டாயே.. பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நன்கு ரீச்சானது. இந்த நிலையில் தலைவன் தலைவி படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அட.. இந்த விஷயம் தெரியுமா?? கில்லி படத்தில் நடிகர் விமல் பாடியிருக்காரா!! அதுவும் எந்த பாடலில் தெரியுமா??

இதையும் படிங்க: கட்டப்பா பாகுபலியை கொல்லாமல் இருந்திருந்தால்.. 10 ஆண்டுகளுக்குப் பிறகு பல்வாழ் தேவன் சொன்ன ட்விஸ்ட் பதிலை பார்த்தீர்களா!!