மூளை ரத்தக்கசிவால் உயிரிழந்த நோயாளி! பெண் மருத்துவரை அடித்து உதைத்த குடும்பத்தினர்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ....



jammu-hospital-doctor-attack-viral-video

ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூளை ரத்தக்கசிவால் பாதிக்கப்பட்ட 60 வயதான ராஜீந்தர் குமார், சண்டிகர் PGI மருத்துவமனையிலிருந்து GMC ஜம்முவிற்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். அவசர சிகிச்சை அளிக்கப்பட்டும், ஜூலை 16 ஆம் தேதி அவர் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது உறவினர்கள் மருத்துவர்களின் அலட்சியே மரணத்திற்குக் காரணம் எனக் கூறி, மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நேரத்தில், ஒரு பெண் மருத்துவரை உறவினர்கள் ஒருவர் உடல் ரீதியாக தாக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூனியர் மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதையும் படிங்க: சைடிஸ் இல்லாததால் ஓரமா போன பாம்பை பிடித்து கடித்து தின்ற இளைஞர். வைரல் வீடியோ.

இந்த சம்பவம் தொடர்பாக, GMC டீன் டாக்டர் அசுதோஷ் குப்தா, “மருத்துவர்கள் மீது வன்முறை மிக வருத்தத்துக்குரியது. இந்த தாக்குதல்களில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, தாக்குதலுக்கு காரணமானவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும், மருத்துவர்கள் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

இதையும் படிங்க: தனது 6 வயது மகளை கொடூரமாக கொன்று வீட்டில் மறைத்த தாய்! அதிரவைக்கும் காரணம்! மனதை உலுக்கும் பகீர் சம்பவம்!