ரெண்டு பேரையும் பிரிச்சுவிட்ருங்க.. ரசிகர்கள் கொண்டாடும் தலைவன் தலைவி ட்ரெய்லர்.! எகிறும் எதிர்பார்ப்பு!!



thalaivan-thalaiva-movie-trailer-released

மக்கள் நாயகன் விஜய் சேதுபதி மற்றும் நடிகை நித்யா மேனன் கணவன் மனைவியாக நடித்து உருவாகியுள்ள திரைப்படம் தலைவன் தலைவி. விஜய் சேதுபதியின் 52 வது படமான இதனை பசங்க, வம்சம், கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை, எதற்கும் துணிந்தவன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் யோகி பாபு நடித்துள்ளனர். 

 விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி

கணவன் மனைவிக்கு இடையேயான உறவை கூறும் இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம் தயாரித்துள்ளது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.  தலைவன் தலைவி திரைப்படம் வரும் 25ம் தேதி ரிலீசாக உள்ளது.

இதையும் படிங்க: விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி.! இன்று மாலை ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.! வெளிவந்த அறிவிப்பு!!

 எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ட்ரெய்லர் 

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் கலகலப்பான எதார்த்தமான இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்துள்ளது.

இதையும் படிங்க: விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி.! இன்று மாலை ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.! வெளிவந்த அறிவிப்பு!!