தாய் இறந்து 15 நாள் தான் ஆகுது..! அடுத்து புள்ளையா.. விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன்.. 11-வது மாடி ஜன்னல் வழியாக தவறி விழுந்து உயிரிழப்பு..! நெஞ்சை உலுக்கும் சோகம்..!!!



vasai-six-year-old-boy-falls-from-11th-floor

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே வசாய் பகுதியில், அடுக்குமாடிக் குடியிருப்பின் 11-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 6 வயது சிறுவன் உயிரிழந்தான். வீட்டிற்கு வெளியே நடைபாதையில் பக்கத்து வீட்டுச் சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிசிடிவி காட்சிகளில் பதிவான விவரங்கள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காலணி அலமாரி மீது ஏறியபோது விபரீதம்

வசாய் பகுதியில் உள்ள நவ்கர் டவர் குடியிருப்பில் மிலித் சுதார் என்ற சிறுவன் குடும்பத்துடன் வசித்து வந்தான். சம்பவத்தன்று வீட்டிற்கு வெளியே உள்ள நடைபாதையில் பக்கத்து வீட்டுச் சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த காலணி அலமாரி மீது சிறுவன் ஏறியுள்ளான்.

இதையும் படிங்க: அதிர்ச்சி.! 13 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான விமானம் மலைக்குகைக்குள் கண்டுப்பிடிப்பு..! ஆனால் உடைமைகள் இருக்கு...உள்ளே இருந்த 212 பயணிகள் எங்கே? மீண்டும் நீடிக்கும் மர்மம்..!!!

அப்போது நிலைதடுமாறிய சிறுவன், அருகிலிருந்த திறந்த ஜன்னல் வழியாக 11-வது மாடியில் இருந்து கீழே விழுந்ததாக சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. கீழே விழுந்த சிறுவன், தீயணைப்புக் குழாய் மீது மோதியதில் பலத்த காயமடைந்தான்.

மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை

சிறுவனை குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, நாய்கான் காவல்துறையினர் விபத்து மரண வழக்குப் பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

15 நாட்களுக்கு முன்பு தாயை இழந்த சிறுவன்

மிலித்தின் தாய் உயிரிழந்து 15 நாட்களே ஆன நிலையில், சிறுவனும் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதே கட்டுமான நிறுவனத்தின் குடியிருப்பில் கடந்த 2025 ஜூலை மாதம் 4 வயது சிறுமி 12-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தும் யஉள்ளார் . அடுத்தடுத்து நிகழ்ந்த உயிரிழப்புகள், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பொதுமக்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளன.

 

இதையும் படிங்க: கல்லூரிக்கு போவதாக சொல்லி ஓயா விடுதிக்கு போன 19 வயது மாணவி! சிறிது நேரத்திற்கு பிறகு அறையிலிருந்து தனியாக வெளியேறிய காதலன்! கதவைத் திறந்து பார்த்த ஊழியர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. கதறி அழும் தந்தை..!!!