விடாது கருப்பு!! தொடர்ந்து சீனாவை வஞ்சிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்



trump-increases-tax-against-china-products

2016 தேர்தலில் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றார் டொனால்ட் ட்ரம்ப். இவர் ஆட்சிக்கு வந்த நாட்களிலிருந்து வெளிநாட்டு கொள்கைகளின் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக சீனாவின் மீது இவர் எடுக்கும் நடவடிக்கைகள் மிகவும் மோசமாக உள்ளது.

trump against china

தொடர்ந்து சீனாவின்மீது வர்த்தக போர் நடத்தி வரும் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதியாகும் சீன பொருட்களுக்கு மீண்டும் வரிவிதிப்பை அதிகரிக்குமாறு தன் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மின்னணு பாகங்கள், ஹேன்ட் பேக் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் சீனப் பொருட்களுக்கு சுமார் 200 பில்லியன் டாலர்கள் அளவிற்கு வரிகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது.

trump against china

அமெரிக்கப் பொருட்களுக்கு சீனாவில் 25% சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. ஆனால் சீனப் பொருட்களுக்கு அமெரிக்காவில் 2.5% வரி விதிக்கப்படுகிறது. இது நியாயமான வர்த்தகம் அல்ல. எனவே, சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கபட வேண்டும் என டிரம்ப் முடிவு செய்துள்ளார். 

தொடர்ந்து சீனப்பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பதும், பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீது சீனா கூடுதல் வரி விதிப்பதும் உலகளவில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மாதம்கூட, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 16 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடி) மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா அதிரடியாக கூடுதல் வரி விதித்தது.

trump against china

இந்நிலையில் மேலும் ரூ.14 லட்சம் கோடி சீனப்பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.