நாகப்பாம்புகளுக்கு உண்மையில் நாகமணிகள் இருக்கிறதா? பாரம்பரிய நம்பிக்கை! உண்மையான விளக்கம் இதோ..



truth-of-naagamani-belief

பெரும் தவம் செய்த பாம்புகளின் தலையில் நாகமணி தோன்றும் என்ற நம்பிக்கை, பாரம்பரிய இந்திய நம்பிக்கைகளில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இந்த மாயக்கற்களுக்கு மந்திர சக்தி இருப்பதாகவும், அவை செல்வம், பாதுகாப்பு, மற்றும் ஆன்மீக ஆற்றலை வழங்கும் எனவும் கூறப்படுகிறது.

நாகமணியின் வரலாறு சமஸ்கிருதத்தில் "நாக" என்றால் பாம்பு, "மணி" என்றால் ரத்தினம். இந்த நம்பிக்கைகள், இந்திய நாட்டுப்புறக் கதைகளிலும் ஆன்மீக மரபிலும் ஆழமாக வேரூன்றியுள்ளன. நாகப்பாம்புகளின் தலைப்பகுதியில் இந்த மணிகள் உருவாகும் என்ற நம்பிக்கை, திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் வழியாகவும் அதிகரித்து வந்துள்ளது.

நாகமணி

இது இருளில் ஒளிரும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது. அதனை வைத்திருப்பவர்கள் தீமைகளிலிருந்து பாதுகாப்பு, உடல்நலன் மற்றும் அதிர்ஷ்டம் பெறுவார்கள் என நம்பப்படுகிறது.

இதையும் படிங்க: கடலுக்கு அடியில் உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி! பெருங்கடலில் மறைந்திருக்கும் மர்மம்! அதிசயமான கண்டுபிடிப்பு!

ஆனால் உண்மையில் நாகமணி இருக்கிறதா?

விஞ்ஞான ரீதியாக, எந்த வகையான பாம்புகளும் முத்துக்களை உருவாக்கும் உடற்கூறியலுடன் பிறக்கவில்லை. பலர் நாகமணியாக நம்பும் பொருட்கள்,பித்தப்பைக் கற்கள் அல்லது கனிமக் கட்டிகள்.

நாகமணி

என விஞ்ஞான பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவை உண்மையான ரத்தினங்கள் அல்ல. அதிலும் முக்கியமாக, அவைகளில் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் இல்லை.

இதையும் படிங்க: கனமழை காரணமாக அமர்நாத் யாத்திரை இடைநிறுத்தம்! மண் சரிவில் அடித்து செல்லப்பட்ட பக்தர்கள்! வெளியான பதறவைக்கும் வீடியோ.