விபத்தில் சிக்கிய ரோகினியின் அம்மா! ஓடிச் சென்று முத்து செய்த காரியம்! அடுத்து வெளிவரும் உண்மைகள்! பரபரப்பான திருப்பங்களுடன் சிறக்கடிக்க ஆசை புரோமோ....



chirakadikka-aasai-muththu-saves-rohini-mother

 பிரபல தமிழ் சீரியல் சிறகடிக்க ஆசை தொடர்ந்து பரபரப்பான திருப்பங்களுடன் ரசிகர்களை ஈர்த்துக்கொண்டு வருகிறது. இந்தக் கதையின் முக்கிய கதாப்பாத்திரங்கள் ஆகிய முத்து மற்றும் மீனா மீது ரசிகர்களின் கவனம் கூடுதலாக செல்கிறது.

தற்போது வெளியாகியுள்ள எபிசோட்களில், ரோகினியின் உண்மையான நிலை வீட்டில் ஒருவருக்கொருவர் தெரியத் தொடங்கியுள்ள சூழலில், விஜயா கடுமையாக எதிர்த்துப் பேசுகிறார். இதே நேரத்தில், ரோகினியின் அம்மா, க்ரிஷை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போது திடீரென ஒரு விபத்தில் சிக்குகிறார். அருகிலிருந்தவர்கள் யாரும் உதவிக்காக முன்வராத சூழலில், அவ்வழியாக வந்த முத்து, விரைந்து செயல்பட்டு க்ரிஷின் பாட்டியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்.

இந்த சம்பவம் மூலம், ரோகினியின் உண்மை நிலை மீண்டும் வெளிச்சத்திற்கு வரும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது. இதனாலே கதையில் புதிய பரபரப்பும், திருப்பங்களும் ஏற்படலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதையும் படிங்க: முத்துவுக்கு மீனா கொடுத்த சர்ப்ரைஸ்! ஏக்கத்தில் முத்து செய்த காரியத்தை பாருங்க! சிறக்கடிக்க ஆசை புரோமோ..

---

இதையும் படிங்க: முத்து மீனாவை நேருக்கு நேர் சந்தித்து இருவரும் கண்ணாலையே பேசிக்கொள்ளும் ரொமான்டிக் காட்சி! சிறக்கடிக்க ஆசை ப்ரோமோ....