பள்ளிக்கு ஸ்கேர்ட் அணிந்து வந்த ஆண் ஆசிரியர்கள்.. காரணம் தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்.!

பள்ளிக்கு ஸ்கேர்ட் அணிந்து வந்த ஆண் ஆசிரியர்கள்.. காரணம் தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்.!


Three male-teachers-wear-skirts-to-school

ஸ்பெயின் நாட்டில் பாலின பாகுபாட்டை அகற்றும் விதமாக ஆண் ஆசிரியர்கள் பள்ளிக்கு ஸ்கேர்ட் அணிந்து வந்த சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் வெலோடோலிட் என்ற நகரில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த நவம்பர் மாதம் மிக்கேல் கோம்ஸ் என்ற 15 வயது சிறுவன் நாம் அணியும் உடையில் எந்த வித பாகுபாடும் இல்லை என்பதை வெளிப்படுத்துவதற்காக பெண்கள் அணியும் ஸ்கேர்ட்டை அணிந்து வந்துள்ளான்.

இதனை பார்த்த அப்பள்ளி நிர்வாகத்தினர் அச்சிறுவனை வழுக்கட்டாயமாக மனநல மருத்துவரிடம் ஆலோசனைக்கு அனுப்பியது மட்டுமின்றி பள்ளியிலிருந்து அச்சிறுவனை நீக்கியுள்ளது.

இச்சம்பவம் குறித்து அச்சிறுவன் சமூக வலைத்தளமான டிக்டாக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளான். அவ்வீடியோ வைரலானதை அடுத்து பலரும் அச்சிறுவனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் அப்பள்ளியில் பணிப்பிரியும் ஆண் ஆசிரியர்களான மேனுவேல் ஓர்டிகா, போர்ஜா வேலுக்ய்யோஸ், ஜோஸ் பினாஸ் உள்ளிட்டோர் சிறுவனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஸ்கேர்ட் அணிந்து வந்து வகுப்பறையில் பாடம் நடத்தியுள்ளனர். 

தற்போது அந்த ஆசிரியர்களின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அது மட்டுமல்லாமல் #ClothesHaveNoGender என்ற ஹேஷ் டேக்கும் தற்போது உலக அளவில் டிரெண்டாகி கொண்டிருக்கிறது.