வெறித்தனமான பிட்புல் நாய்! பெட்ரோல் பங்கில் நபர் ஒருவரின் கையை கடித்து குதறிய கொடூரம்! பதற வைக்கும் வீடியோ...



pitbull-dog-attack-pune

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரத்தில் ஜூலை 2ஆம் தேதி நடைபெற்ற ஒரு நாய் தாக்குதல் சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொண்ட்வா பகுதியில் உள்ள சோமாஜி பெட்ரோல் பங்க் அருகே, நடந்து சென்ற நபர் மீது பிட்புல் நாய் திடீரென தாக்கியது.

பயங்கரமாக கடித்த பிட்புல் நாய்

நாய் தாக்கிய போது, அந்த நபரின் கை முழுவதும் நாயின் வாயில் சிக்கி கொடூரமாக கடிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட நபர் தப்பிக்க முயன்றும், பிட்புல் நாய் அதன் பிடியை விடாமல் இறுக்கமாக பிடித்திருந்தது. அருகில் இருந்தவர்கள், இரும்புக் கம்பியால் அடித்தும், தண்ணீர் ஊற்றியும் அதை பிரிக்க முடியாமல் திணறினர்.

வைரலாகும் வீடியோ காட்சி

இந்த தாக்குதல் சம்பவம் பதிவாகிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் ஒரு வீடியோவில், கையில் கடும் காயங்களுடன் ரத்தம் சிந்திய நபர், இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் காட்சியும் வெளியாகியுள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாவது, "நபர் ஒருவர் பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்றபோது, பிட்புல் நாய் தாக்கியது. அந்த நபரை காப்பாற்றுவதற்காக பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் எடுத்த அதிவேக நடவடிக்கை, மிகப்பெரிய விபத்தை தவிர்த்தது" என்றனர்.

பயங்கரமான நாய் இனங்களுக்கு இந்திய அரசின் தடைகள்

இந்தச் சம்பவம் போன்றவை அதிகரித்ததை அடுத்து, இந்திய அரசு 2024ம் ஆண்டில் அதிரடியான நாய் இனங்களின் இறக்குமதி, விற்பனை மற்றும் இனப்பெருக்கத்தைத் தடை செய்தது. இதில் பிட்புல், ராட்வெய்லர், டெரியர், வுல்ஃப் டாக், ரஷ்யன் ஷெப்பர்ட் மற்றும் மாஸ்டிஃப் ஆகிய நாய் இனங்கள் இடம்பெறுகின்றன.

மத்திய அரசு வெளியிட்ட இந்த உத்தரவை அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கடுமையாக அமல்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் 

தடை செய்யப்பட்ட நாய்கள் கட்டுப்பாடின்றி வளர்க்கப்படுவது, பொது மக்களுக்கு மிகப்பெரிய உயிர்ச் சிக்கலை உருவாக்குகிறது. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். பிட்புல் நாய்கள் போன்ற இனங்கள் பொதுமக்கள் நடமாட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்தியால், அது நேரடியான உயிர் அச்சுறுத்தலாகும் என்பதாலும், அரசு உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பு.