தொடர் குண்டு வெடிப்புகளால் முடக்கப்பட்ட சமூக வலைத்தளங்கள்! இலங்கை மக்கள் பரிதவிப்பு!

தொடர் குண்டு வெடிப்புகளால் முடக்கப்பட்ட சமூக வலைத்தளங்கள்! இலங்கை மக்கள் பரிதவிப்பு!


social media banned in sri lanka


ஈஸ்டா் திருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் கிறிஸ்தவா்கள் தேவாலயங்களுக்குச் சென்று சிறப்பு பிராா்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் இலங்கை தலைநகா் கொழும்புவில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

bomb blast 

இந்தநிலையில், இலங்கை தலைநகா் கொழும்புவில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றபோது குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், இதில் பலா் உயிாிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

அப்பகுதியில் உள்ள தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என அடுத்தடுத்து 6 இடங்களில் நடந்த பயங்கர குண்டுவெடிப்புகளில் 100 க்கு மேலானோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அங்கு நடந்த சம்பவத்தால், முகநூல், வாட்சப், ட்விட்டர், வைப்பர்  உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் இலங்கை அரசால் முடக்கப்பட்டுள்ளது. இவை மீண்டும் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என அரசு அறிவிக்கும் வரை அனைவரும் பொறுமை காத்திடவேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் தகவல் பரிமாற்றம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.