வியப்பூட்டும் டிஜிட்டல் கடிகாரம்! எங்கு உள்ளது தெரியுமா? அது எப்படி இயங்குகிறதுனு பாருங்க!



schiphol-digital-clock-man-inside

 ஆம்ஸ்டர்டாம் ஷிபோல் விமான நிலையத்தில் காணப்படும் புதுமையான மின்னணு கடிகாரம் பற்றிய விஷயம் தான். இந்த வியப்பூட்டும் டிஜிட்டல் கடிகாரம் ஒருவர் சிக்கியிருப்பது போன்று தோற்றமளிக்கச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது பார்ப்பவர்களை விழித்துப் பார்க்கச் செய்கிறது.

ஆம்ஸ்டர்டாம் கடிகாரம்

ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றான ஷிபோல் விமான நிலையம், பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகின்றது. அதில் ஒன்று — அங்குள்ள கடிகாரங்கள், குறிப்பாக ஹில்டன் ஹோட்டலுக்கு அருகிலுள்ள இடத்தில், நேரம் மற்றும் தூரங்களை காட்டும் சிறப்பம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளன.

ஆம்ஸ்டர்டாம் கடிகாரம்

இந்த மின்னணு கடிகாரம் ஒரு மனிதன் உள்ளே இருப்பது போல தோன்றும். ஒவ்வொரு நிமிடமும், அந்த மனிதன் போல காட்சியளிக்கும் அவதாரம்.ஒவ்வொரு நிமிடமும் அவர் கடிகார முட்களை அழித்து மீண்டும் வரைவது போல தோன்றும். அவர் ஒரு நாளில் பல முறை நேரம் மாற்றுவது போல தோன்றும். ஆனால் உண்மையில், இது ஒரு கலைஞரால் உருவாக்கப்பட்ட தயாரித்த காணொளி தான்.

இதையும் படிங்க: ஒட்டகக் கண்ணீரில் 26 வகை பாம்புகளின் விஷத்தை முறிக்கும் ஆற்றல்! இவ்வளவு சக்தியா! பாம்பு விஷத்திற்கு புதிய தீர்வு..

ஆம்ஸ்டர்டாம் கடிகாரம்

இந்த புதுமையான காட்சி, பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், ஒரு கண்கவர் அனுபவத்தையும் தருகிறது.

 

இதையும் படிங்க: நடுவானில் பறந்த விமானத்தில் 3 மணி நேரமாக கழிவறையில் இருந்த இளம் ஜோடி! அடுத்து நடந்த அதிர்ச்சி! பைலட் செய்த செயலை பாருங்க...