தலைமறைவாக இருந்த மீரா மிதுன் டெல்லியில் கைது! நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு...
ஒட்டகக் கண்ணீரில் 26 வகை பாம்புகளின் விஷத்தை முறிக்கும் ஆற்றல்! இவ்வளவு சக்தியா! பாம்பு விஷத்திற்கு புதிய தீர்வு..

ஒட்டகத்தின் ஒரு சொட்டு கண்ணீருக்கு 26 வகையான பாம்புகளின் விஷத்தை முறிக்கக்கூடிய சக்தி இருக்கிறது என்பதை உலகம் முழுவதும் பல அரசும் தனியார் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களும், பாம்பு கடிக்கு புதிய விஷ எதிர்ப்பு மருந்துகளை உருவாக்கும் பணியில் தீவிரமாக உள்ளன.
அதில் ஒட்டகக் கண்ணீர் முக்கிய பங்காற்றுகிறது. இதில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பிகள், குறிப்பாக கட்டு விரியன் போன்ற விஷசாயலான பாம்பு இனங்களால் வரும் தாக்கத்தை குறைக்கக்கூடிய ஆற்றல் கொண்டுள்ளன.
மேலும், இந்தக் கண்ணீர், ஸ்ஜோகிரென்ஸ் நோய்க்குறி போன்ற தன்னுடல் தாக்க நோய்களுக்கும் சிகிச்சை தரக்கூடியதாக இருப்பதைக் கூறும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதில் உள்ள லைசோசைம் எனப்படும் நொதிகள், பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் வீக்கம் ஏற்படச் செய்யும் நுண்ணுயிரிகளை அழிக்கும் தன்மை கொண்டவை.
இதையும் படிங்க: நடுவானில் பறந்த விமானத்தில் 3 மணி நேரமாக கழிவறையில் இருந்த இளம் ஜோடி! அடுத்து நடந்த அதிர்ச்சி! பைலட் செய்த செயலை பாருங்க...
பாலைவனத்தில் வாழும் ஒட்டகம், அதன் கண்களை தூசி, கிருமிகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து காப்பதற்காக, இந்த சக்தி வாய்ந்த கண்ணீரை உருவாக்குகிறது. இதற்கான ஆதாரமாக, பிகானரில் உள்ள தேசிய ஒட்டக ஆராய்ச்சி மையம் (NRCC) நடத்திய ஆய்வில், ஒட்டகக் கண்ணீர் 26 வகையான பாம்பு விஷங்களை நடுநிலையாக்க முடியும் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
இது போன்ற ஆன்டிபாடிகள், பாரம்பரிய ஆன்டிவெனோம்கள் போல அல்லாமல், வெப்பநிலைக்கு சாதகமாகவும், குறைந்த ஒவ்வாமை விளைவிக்கக் கூடியதாகவும் இருக்கலாம். இதனால் தொலைதூர மற்றும் மருத்துவ வசதி குறைந்த பகுதிகளில் இதை சுலபமாகப் பயன்படுத்த முடியும்.
இவ்வாய்வுகள் இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளன என்றாலும், எதிர்காலத்தில் இது பாம்பு கடிக்கு மாற்று சிகிச்சையாக பெரும் புரட்சியை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: பசிபிக் கடலுக்குள் இருந்த கருப்பு நிற மர்ம முட்டைகள்! அதில் உள்ளே இருந்தது என்ன? ஆய்வில் வெளிவந்த தகவல்...