இந்தியர்கள் மீட்க கரம்கொடுத்த ரஷியா.. 130 பேருந்துகள் ஏற்பாடு.. ரஷியாவில் இருந்து இந்தியா அனுப்ப நடவடிக்கை.!
இந்தியர்கள் மீட்க கரம்கொடுத்த ரஷியா.. 130 பேருந்துகள் ஏற்பாடு.. ரஷியாவில் இருந்து இந்தியா அனுப்ப நடவடிக்கை.!

உக்ரைன் - ரஷியா போர் 9 ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனில் உள்ள பல்வேறு நகரங்கள் ரஷியாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், சபிரோஷியா அணுமின் நிலையத்தை ரஷிய படைகள் சுற்றி வளைத்துள்ளன.
போர்சூழலில் இந்தியர்கள் உக்ரைன் நாட்டில் சிக்கித்தவித்து வரும் நிலையில், அவர்களை மீட்க ஆப்ரேசன் கங்கா திட்டம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியர்கள் சாலை மார்க்கமாக அண்டை நாடுகளுக்கு வரவழைக்கப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலமாக தாயகம் அழைத்து வரப்படுகிறார்கள்.
இந்தியர்களை மீட்கவும், அவர்களின் உயிர் பாதுகாப்புக்கும் ரஷியா ஒத்துழைப்பதாக தெரிவித்துள்ள நிலையில், உக்ரைனில் உள்ள கார்கிவ், சுமி மாகாணத்தில் தவிக்கும் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவரை மீட்க 130 பேருந்துகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த பேருந்துகள் ரஷியாவின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், 130 பேருந்துகள் மூலமாக மீட்கப்படும் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள், ரஷியாவின் பெல்கோர்ட் நகருக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கிருந்து தாயகம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.