உலக மருத்துவ வரலாற்றில் முதல் முறை..!! பெண்ணுக்கு பன்றியின் கிட்னியை பொருத்திய மருத்துவர்கள்..

உலக மருத்துவ வரலாற்றில் முதல் முறை..!! பெண்ணுக்கு பன்றியின் கிட்னியை பொருத்திய மருத்துவர்கள்..



Pig kidney to human viral news

பன்றியின் சிறுநீரகத்தை பெண் ஒருவருக்கு பொருத்தி சாதனை படைத்துள்ளனர் அமெரிக்க மருத்துவர்கள்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த என்.ஒய்.யு லங்கோன் மருத்துவமனையில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர் மருத்துவர்கள். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றி ஒன்றின் சிறுநீரகத்தை பெண் ஒருவருக்கு பொருத்தி வெற்றிகரமாக செயல்பட வைத்துள்ளனர்.

pig kidney to human

பெண் ஒருவரின் சிறுநீரகம் செயலிழக்கும் நிலையில் இருந்தநிலையில், அந்த பெண்ணிற்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட  பன்றியினுடைய சிறுநீரகத்தை பொருத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த பெண்ணின் உடலுக்கு உள்ளே சிறுநீரகத்தை பொறுத்தாமல், பன்றியின் சிறுநீரகத்தை உடலுக்கு வெளியே வைத்து அவரின் ரத்தக் குழாய்களில் இணைக்கப்பட்டு, மூன்று நாட்கள் வரை பராமரிக்கப்பட்டுள்ளது.

பன்றியின் சிறுநீரகம் அந்த பெண்ணின் நோயெதிர்ப்பு மண்டலத்தால் நிராகரிக்கப்படமால் இயங்குவதை கண்டு மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். மருத்துவ வரலாற்றில் இதுஒரு மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உடல் உறுப்பு தட்டுப்பாட்டால் பலர் உயிரிழக்கும்நிலையில், இந்த சோதனை முயற்சி உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில் மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கும் என கூறப்படுகிறது.