அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த மக்கள்! அனைவரையும் தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பு!

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த மக்கள்! அனைவரையும் தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பு!


People arrived chennai from america

சீனாவின் உகான் நகரில் இருந்து ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா அமெரிக்காவில் அதிக அளவில் பரவி அதிகப்படியான உயிர்களை காவு வாங்கியது. இந்த கொடூர வைரஸின் பரவல் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்த நிலையில், கொரோனா காரணமாக இந்தியாவில் மே 17ஆம் தேதி வரை மூன்றாவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நாடு முழுவதும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டது.

இந்தநிலையில், ஊரடங்கால் பல்வேறு நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை சொந்த நாட்டுக்கு அழைத்து வர மத்திய அரசு வந்தே பாரத் என்ற திட்டத்தின் மூலம் 60-க்கும் மேற்பட்ட சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது.

flight

இந்தநிலையில் துபாய், குவைத் மற்றும் மலேசியாவில் இருந்து சென்னைக்கு இயக்கிய 4 சிறப்பு விமானங்களில் 710 பேர் அழைத்து வரப்பட்டு தனியார் கல்லூரி மற்றும் ஓட்டல்களில் 14 நாள் தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், அமெரிக்காவில் சிக்கி தவித்தவர்களை ஏற்றிக்கொண்டு சிறப்பு விமானம் சென்னை வந்தது. இந்த விமானத்தில் 141 பேர் வந்தனர். அதேபோல் மஸ்கட்டில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில் 183 பேர் வந்தனர். அவர்கள் 324 பேரும் சென்னை மற்றும் புறநகரில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் ஓட்டல்களில் தனிமைப்படுத்த அழைத்துச்செல்லப்பட்டனர்.