சமையலறையில் இந்த பொருட்களை எல்லாம் தலைகீழாக வைக்க கூடாது! வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? வாஸ்து சாஸ்திரத்தின் உண்மை..



vastu-tips-kitchen-utensils-placement

வாச்து சாஸ்திரம் மனித வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக சமையலறை என்பது வீட்டில் ஆரோக்கியம் மற்றும் செழிப்பு உருவாகும் இடமாக கருதப்படுகிறது. இந்த பதிவில், சமையலறையில் எந்தெந்த பாத்திரங்களை தலைகீழாக வைக்கக் கூடாது என்பதையும், வாஸ்து விதிகளின் அடிப்படையில் எவ்வாறு வைக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

சமையலறை வாஸ்து

சமையலறை அமைப்பு மற்றும் வாஸ்து முக்கியத்துவம்

வீட்டின் சமையலறை என்பது அன்னபூரணி தேவி மற்றும் மகாலட்சுமி வசிக்கும் இடமாக எண்ணப்படுகிறது. எனவே, வாஸ்து விதிகள் படி சமையலறையை அமைத்தால் நேர்மறையான சக்திகள் சூழ சூழ்ந்திருக்கும். அதிகமான நேரத்தை சமையலறையில் செலவிடும் பெண்களுக்கு இது ஆன்மீக மற்றும் நலன் தரும்.

சமையலறை வாஸ்து

சமையலறையில் தவிர்க்க வேண்டிய நிலைகள்

சமையலறையை வடமேற்குப் பகுதியில் அமைப்பதை தவிர்க்க வேண்டும். கிழக்கு அல்லது தெற்கு சிறந்த இடமாக கருதப்படுகிறது.

குப்பையை கிழக்கு பக்கம் வைக்கக்கூடாது. இது மகாலட்சுமி நுழைவுக்கு தடையாக அமையும்.

பழைய, உடைந்த பாத்திரங்களை வீட்டில் வைத்திருக்கக்கூடாது.

இரவில் பாத்திரங்களை கழுவாமல் வைக்கும் பழக்கம் தவிர்க்கப்பட வேண்டும்.

சமையலறை வாஸ்து

பாத்திரங்களை தலைகீழாக வைப்பது ஏன் தவிர்க்க வேண்டும்

சமையலறையில் பாத்திரங்களை கழுவிய பின்பு தலையகழாக வைப்பது ஒரு பழக்கம். ஆனால், வாஸ்து விதிகள் படி, தவா, தோசைக்கல், எண்ணெய் சட்டி போன்றவற்றை தலைகீழாக வைக்கக் கூடாது. இது எதிர்மறையான சக்திகளை ஏற்படுத்தி, குடும்ப நலத்தையும் பண வரவையும் பாதிக்கும்.

இதையும் படிங்க: இந்த நேரத்தில் செய்யும் வேலைகள் நிச்சயம் வெற்றி பெரும்! ஏன்னு தெரியுமா? ஜோதிடக் கண்ணோட்டத்தின் விளக்கம்....

சமையலறை வாஸ்து

சரியான பாத்திர வைக்கும் முறை

சமைத்து முடித்ததும், தவா மற்றும் தோசைக்கல்லை நன்றாக கழுவி, செங்குத்தாக அல்லது பக்கவாட்டாக வைக்கலாம். இது வீட்டில் சந்தோஷம் மற்றும் பணப்புழக்கத்தை அதிகரிக்க உதவுகிறது.

 

இதையும் படிங்க: உலகிலேயே உருளைக்கிழங்கு அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு எது தெரியுமா?