நடிகை சமந்தாவின் 10ஆம் வகுப்பு மார்க் சீட்! இது மீண்டும் வந்துவிட்டதா? வெளியிட்ட சமந்தாவின் மகிழ்ச்சி பதிவு!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்க, இவர் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்றதோடு, உடல்நிலை சிக்கலால் சினிமாவை தற்காலிகமாக விட்டு விலகினார்.
பாலிவுட் வெப் சீரிஸ்களில் இடம்பிடிக்கும் சமந்தா
தற்போது சமந்தா, பாலிவுட் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். தனது நடிப்பால் ரசிகர்களின் மனங்களை மீண்டும் கவர்ந்துள்ள சமந்தா, தொடர்ந்து இணையத்தில் பேசப்படும் பிரபலமாக உள்ளார்.
பள்ளி நாட்களின் நினைவுகளை மீட்ட மார்க் சீட்
இந்நிலையில் சமந்தாவின் பத்தாம் வகுப்பு மார்க் சீட் மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நடிகை சமந்தா, "இது மீண்டும் வந்துவிட்டதா" என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: ஸ்ரீகாந்த் வீட்டில் 3 பாக்கெட்டுகள் கண்டுபிடிப்பு! 40 முறை போதைப்பொருள் வாங்கியதாக தகவல்! போலீசாரின் விளக்கம்...
ஆங்கில மதிப்பெண் குறைவில் சமூக வலைதள விமர்சனம்
அந்த மார்க் சீட்டில், அனைத்து பாடங்களிலும் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், ஆங்கிலத்தில் மட்டும் 80க்கு கீழ் மதிப்பெண் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதை பார்த்த சில நெட்டிசன்கள், "பாவம் சமந்தாவுக்கு இங்கிலீஷ் வராத போல" என விமர்சனமாக கருத்துகள் பதிவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: போதைப் பொருள் வழக்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது! அடுத்தடுத்து வெளியாகும் பல உண்மைகள்...