போதைப் பொருள் வழக்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் கைது! அடுத்தடுத்து வெளியாகும் பல உண்மைகள்...

பிரபல தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் போலிசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் திரையுலகத்திலும் ரசிகர்களிடையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாடகி மங்லியின் பிறந்தநாளில் எழுந்த விவகாரம்
‘தக் லைஃப்’ படத்தின் "முத்த மழை" பாடலை தெலுங்கில் பாடிய பாடகி மங்லி, தனது பிறந்தநாள் நிகழ்வில் போதைப்பொருள் விநியோகம் செய்ததாக கூறப்பட்டு, அதன்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அதிமுக நிர்வாகியிடம் வாங்கியதாக குற்றச்சாட்டு
இந்த வழக்கில் முக்கியமான தகவலாக, நடிகர் ஸ்ரீகாந்த், முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாந்த் என்பவரிடம் இருந்து கொக்கேன் வாங்கி பயன்படுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபான விடுதியில் ஏற்பட்ட மோதலின் போது கைது செய்யப்பட்ட பிரசாந்த், இந்த தகவலை போலிசாரிடம் உடைத்துள்ளார்.
இதையும் படிங்க: 51 வயதிலும் குறையாத அழகுடன் உள்ள நடிகை தேவயானி! தம்பியுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட கலகலப்பு வீடியோ!
ரத்த பரிசோதனையில் உறுதியான தகவல்
பின்னர் ஸ்ரீகாந்துக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியாகியது. மேலும், அவர் வாங்கிய 1 கிராம் கொக்கேனுக்கு ரூ.12,000 செலுத்தியிருப்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும் பிரபலங்கள் தொடர்புடைய சாத்தியம்
இந்த வழக்கில், 'கழுகு' பட நடிகர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், இதர பல பிரபலங்களும் இதில் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: திருமணம் அப்போதுதான்.. ஓப்பனாக போட்டுடைத்து நடிகை சதா சொன்ன விஷயம்.! ரசிகர்கள் ஷாக்!!