51 வயதிலும் குறையாத அழகுடன் உள்ள நடிகை தேவயானி! தம்பியுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட கலகலப்பு வீடியோ!



devayani-birthday-celebration-family-dance-video

நடிகை தேவயானியின் பிறந்த நாள் கொண்டாட்டம் இணையத்தில் வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் 90களில் பிரபலமானவர் நடிகை தேவயானி. வெள்ளித்திரையைத் தவிர சின்னத்திரையிலும் தனக்கென ஒரு தனி இடம் பெற்றுள்ளார். தற்போது இவர் தனது 51வது பிறந்த நாளை குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடிய வீடியோ இணையத்தில் பரவலாக வைரலாகியுள்ளது.

தேவயானி birthday

தமிழ் சினிமாவில் தேவயானியின் ஆரம்பம்

1995 ஆம் ஆண்டு வெளியான 'தொட்டாச் சிணுங்கி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான தேவயானி, அதன் பிறகு ‘கல்லூரி வாசல்’ படத்தில் நடித்தார். இந்த படங்கள் சுமாரான வரவேற்பைப் பெற்றதாலும், ஆனால் அவர் சிறந்த வாய்ப்பு பெற்ற படம் ‘காதல் கோட்டை’. இதில் அஜித் ஜோடியாக நடித்த தேவயானிக்கு இந்த படம் பெரும் வெற்றியை தந்தது.

தேவயானி birthday

வெற்றிப் படங்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவு

இதனைத் தொடர்ந்து ‘சூர்ய வம்சம்’, ‘மறுமலர்ச்சி’, ‘நீ வருவாய் என’, ‘தெனாலி’, ‘பஞ்சதந்திரம்’, ‘ஆனந்தம்’ போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்த தேவயானி, ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டார்.

இதையும் படிங்க: நடிகை நயன்தாரா பயன்படுத்தும் Red handbag விலை எவ்வளவு தெரியுமா? வெளியான பெறுமதி.. ஷாக்கில் ரசிகர்கள்...

சின்னத்திரையிலும் வெற்றி பெற்ற தேவயானி

சன் டிவியில் ஒளிபரப்பான ‘கோலங்கள்’ சீரியல் அவரை சின்னத்திரையிலும் புகழின் உச்சிக்கு கொண்டுசென்றது. இதேபோல் இயக்குநர் ராஜகுமாரன் அவர்களின் படத்தில் நடித்தபோது காதல் மலர, பின்னர் குடும்ப எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துகொண்டனர்.

தேவயானி birthday

இனியா மற்றும் பிரியங்கா எனும் இரு மகள்கள்

இந்த தம்பதிகளுக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில், இனியா தற்போது Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமபா சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகின்றார்.

தேவயானி birthday

பிறந்த நாளில் தேவயானியின் சிறப்பு நடனம்

நேற்றைய தினம், தேவயானி தனது பிறந்த நாளை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடினார். அவரது தம்பி நகுலுடன் இணைந்து ‘சூர்ய வம்சம்’ திரைப்படத்தின் பாடலுக்கு நடனமாடும் காணொளி தற்போது இணையத்தில் பிரபலமாகியுள்ளது. இந்த வீடியோ நெட்டிசன்களின் லைக்குகள் மற்றும் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டு வைரலாகி வருகிறது.

 

இதையும் படிங்க: கார் பிரேக் வயரை கட் செய்தது யார்! நீங்களா.. மரண பயத்தில் ரோகிணி..! சிறகடிக்க ஆசை புரோமோ.