நடிகையிடம் இப்படியா கேள்வி கேட்ப? நடிகை நிதி அகர்வாளிடம் ரசிகர் கேட்ட கேள்வியை பாருங்க.
மொட்டை அடித்து ஆளே வித்தியாசமாக மாறிய நடிகர் அஜித்! வெளிவந்த லேட்டஸ்ட் லுக் வீடியோ இதோ...

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித், ரசிகர்களிடையே எப்போதும் பெரும் வரவேற்பைப் பெறுகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் உலகளவில் ரூ. 285 கோடி வசூல் செய்து பெரும் சாதனை படைத்தது. இதன் மூலம் இந்த படம், அஜித் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் மிக சிறந்ததாக மாறியுள்ளது.
AK 64 படத்திற்கு உயர்ந்த சம்பளத்தில் ஒப்பந்தம்
குட் பேட் அக்லியின் வெற்றியை தொடர்ந்து, அடுத்த படமான AK 64 இயக்கத்தை ஆதிக் ரவிச்சந்திரன் மேற்கொள்கிறார். இந்த படத்திற்கு நடிகர் அஜித் ரூ. 180 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படத்திற்கு சம்பந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார் ரேஸிலும் அஜித்தின் ஆட்டம் தொடருகிறது
சினிமா மட்டுமல்ல, கார் ரேஸிங்கிரலும் மிகுந்த ஆர்வம் உள்ள அஜித், தற்போது நடைபெறும் GT4 European Series ரேஸில் பங்கேற்க தயார் ஆகி வருகிறார். இந்த சீரிஸின் மூன்றாவது சுற்றுக்கு அஜித் தயாராகும் வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க: நடிகர் அஜித்துடன் பிரபல இசையமைப்பாளர் திடீர் சந்திப்பு.! அட.. அவர்கள் பேசிய டாபிக்தான் வேறலெவல்!!
புதிய கெட்டப்பில் அஜித்
இந்த ரேஸுக்காக மொட்டைதலை கெட்டப்பில் தோன்றிய அஜித், ரசிகர்களிடையே புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த தோற்றத்தில் அவர் ரெட் மற்றும் வேதாளம் கணேஷ் தோற்றத்துக்கு ஒத்தவராக உள்ளார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்கள் உற்சாகத்தில் வீடியோ வைரல்
அஜித் கலந்துகொள்ளும் இந்த GT4 ரேஸிங் வீடியோ, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவரது ரேஸிங் பயணமும், திரைப்பட அறிவிப்பும் இணைந்து ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: நடிகை சமந்தாவின் 10ஆம் வகுப்பு மார்க் சீட்! இது மீண்டும் வந்துவிட்டதா? வெளியிட்ட சமந்தாவின் மகிழ்ச்சி பதிவு!