நடிகர் அஜித்துடன் பிரபல இசையமைப்பாளர் திடீர் சந்திப்பு.! அட.. அவர்கள் பேசிய டாபிக்தான் வேறலெவல்!!



actor-ajith-meeting-with-music-director-yuvan

தென்னிந்திய திரையுலகில் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது 63-வது படமான 'குட் பேட் அக்லி' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் கார் ரேஸிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். 

இதற்கிடையில் அஜித்தின் 64வது படத்தை இயக்கபோவது யார் என கடந்த பல மாதங்களாக ரசிகர்களிடையே பெரும் ஆவல் இருந்த நிலையில் அப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. மேலும் அதில் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நடிகர் அஜித்தும் பிரபல இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜாவும் நேரில் சந்தித்துள்ளனர்.

இவர்களின் சந்திப்பு குறித்த தகவல் வெளிவந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் அடுத்த படத்தின் கூட்டணியா? என்ற கேள்வி எழும்பியது. இந்நிலையில் அஜித்தை சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்த யுவன், அஜித்தை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி எனவும், இருவரும் கார்களை பற்றி பேசிக்கொண்டு இருந்ததாகவும் பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: என்னால அதெல்லாம் முடியாதுனு ட்ரோல் செய்றாங்க.! ஆதங்கத்தில் பொங்கிய நடிகை அனுபமா!! ஏன்? என்னாச்சு??

இதையும் படிங்க: புதிய அவதாரம்.. நடிகர் ஸ்ரீயின் தற்போதைய நிலை.! வெளியிட்ட பதிவால் ரசிகர்களுக்கு ஷாக் சர்ப்ரைஸ்!!