புதிய அவதாரம்.. நடிகர் ஸ்ரீயின் தற்போதைய நிலை.! வெளியிட்ட பதிவால் ரசிகர்களுக்கு ஷாக் சர்ப்ரைஸ்!!



actor-sri-published-his-first-english-novel

தமிழ் சினிமாவில் கடந்த 2012 ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த “வழக்கு எண் 18/9” என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீ. அதனைத் தொடர்ந்து அவர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு, சோன் பப்டி உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். 

தொடர்ந்து நடிகர் ஸ்ரீ கடந்த 2024 ஆம் ஆண்டு வெளிவந்த இறுகப்பற்று என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் சில காலங்களுக்கு முன் அரைகுறை ஆடையுடன், முடி கலரிங் செய்யப்பட்டு, எடை மிகவும் குறைந்து விலா எலும்புகள் தெரியுமளவிற்கு அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. 

அதனைத் தொடர்ந்து பல பிரபலங்களின் முயற்சியால் அவர் மீட்கப்பட்டு குடும்பத்துடன் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும், அவருக்கு முறையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் பரவியது. இந்த நிலையில் தற்போது நடிகர் ஸ்ரீ புதிதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தான் " MAY EYE COME IN? " என்ற நாவலை எழுதியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: என்னா லுக்கு.. வெல்வெட் உடையில் வேற லெவல் கிளிக்ஸ்.! இளசுகளை கிக்கேத்தும் டான் நாயகி.!

Shri

அதில் அவர், எனது முதல் ஆங்கில நாவலான "MAY EYE COME IN? "உலகிற்கு பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது பிரதிகளை amazon.in பக்கத்தில் இப்போதே பெறுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

 

 

இதையும் படிங்க: விஜயகுமார் குடும்பத்தில் ஜோவிகாவை தொடர்ந்து அடுத்த ஹீரோயின் ரெடி! அது யாருன்னு பாருங்க! வைரலாகும் புகைப்படம்....