மூஞ்ச பாரு.. வீடியோ மூலம் சரியான பதிலடி கொடுக்கும் இனியா! திட்டித்தீர்க்கும் வீடியோ வைரல்....



iniya-truth-revealed-gopi-emotional-scene

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல், 1000 எபிசோடுகளை கடந்தும் தொடர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. நடுத்தர குடும்ப வாழ்க்கையின் உண்மையை பிரதிபலிக்கும் இந்த தொடரில், பாக்கியா என்ற பெண் தனது குடும்பத்தை தனியாக கவனிக்கும் முறையில் மக்கள் மனங்களில் இடம்பிடித்துள்ளார்.

பாக்கியலட்சுமி

அசைன்மென்ட் மூலம் புதிய திருப்பம்

இனியா அலுவலகத்தில் ஒரு முக்கியமான அசைன்மென்ட் பெறுகிறார். இதில் போதைப்பொருள் பழக்கத்தில் உள்ள சிறுவர்களைப் பற்றிய கட்டுரைகள் அவரிடம் ஒப்படைக்கப்படுகின்றன. இந்த பணியில் மூழ்கி இருக்கும் போது, நண்பர்கள் அழைப்பினால் ஒரு குழப்பநிலையில் அமர்ந்திருக்கும் இனியாவுக்கு, நிதிஷ் பற்றிய உண்மைகள் தெரிய வருகின்றன.

சுதாகரின் மறைத்த செயல்கள் வெளிச்சத்திற்கு

நிதிஷை பற்றி உண்மை தெரியவரும் தருணத்தில், சுதாகர் தான் பல லட்சம் செலவழித்து செய்திகளை மறைத்துள்ளார் என்பதும், இவை இனியாவுக்கு சொன்னபோது ஏற்பட்ட அதிர்ச்சி வெளிப்படையாக இருந்தது. தொடர்ந்து கூறப்படுகின்ற தகவல்களால், இனியா சோகத்தில் ஆழ்ந்துவிடுகிறார்.

இதையும் படிங்க: அம்மாவானாலும் நளினம் குறையாத நடன அழகு! சாயிஷாவின் மெய்சிலிர்க்கவைக்கும் நடன வீடியோ இணையத்தில் வைரல்!

பாக்கியலட்சுமி

கோபியிடம் உண்மையை கூறும் இனியா

இந்த நெருக்கடியான நிலையில், பாக்யாவுக்கு பேச நினைத்த இனியா, பின்னர் கோபியிடம் பேச முடிவு செய்கிறார். பிறந்தநாள் நிகழ்ச்சி முடிந்ததும், அனைத்தையும் சொல்லி கதறி அழும் காட்சி, சீரியலின் முக்கியமான தருணமாக இருக்கிறது.

சந்தானம் ரீலுக்கு பதிலடி

இந்த கவலையான சூழ்நிலைக்கு எதிராக, இனியா சந்தானத்தின் மூஞ்சு பாரு காமெடியை அடிப்படையாக வைத்து ஒரு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள், “இனியாவை உருவகேலி செய்தவர்களுக்கு இது சரியான பதிலடியாக இருக்கும்" எனக் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: மொட்டை அடித்து ஆளே வித்தியாசமாக மாறிய நடிகர் அஜித்! வெளிவந்த லேட்டஸ்ட் லுக் வீடியோ இதோ...