உலகமே அதிர்ச்சி..! ஒரே மாதத்தில் 75,000 பேர் பலி.. வரலாற்றில் மோசமான மாதமாக அக்டோபர்..!

உலகமே அதிர்ச்சி..! ஒரே மாதத்தில் 75,000 பேர் பலி.. வரலாற்றில் மோசமான மாதமாக அக்டோபர்..!


october-deadliest-month-of-pandemic-in-russia-with-near

அக்டோபர் மாதத்தில் மட்டும் 75,000 பேர் கொரோனாவுக்கு ரஷியாவில் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதும் 214 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ், முதன் முதலில் சீனாவில் இருந்து பரவ தொடங்கியது. இந்த வைரஸால் ஒவ்வொரு நாடும் கடுமையான அளவு பொருளாதார ரீதியாகவும், மனித உயிர்களை இழப்பது ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது, சர்வதேச அளவிலான ஊரடங்களும் அந்தந்த நாட்டின் சார்பில் அறிவிக்கப்படுகிறது. 

தற்போது வரை கொரோனாவால் உலகளவில் 265,197,211 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,258,356 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 238,977,513 பேர் பூரண நலனுடன் இல்லத்திற்கு திரும்பியுள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலில் அமெரிக்காவும், அதனைத்தொடர்ந்து இந்தியா, பிரேசில், இங்கிலாந்து, ரஷியா, துருக்கி நாடுகள் உள்ளன. 

russia

இந்நிலையில், ரஷியாவில் அக்டோபர் மாதத்தில் பெரும் துயர கொரோனா மரணங்கள் அதிகளவு ஏற்பட்டுள்ளது என்றும், அம்மாதத்தில் மட்டும் ரஷியா முழுவதும் சேர்த்து 75 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என ஏ.எப்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

கொரோனா பரவிய நாளில் இருந்து ஏற்பட்ட உச்சகட்ட மோசமான மாதமாக கடந்த அக்டோபர் மாதம் ரஷிய நாட்டில் அதிகளவு உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி அந்நாட்டின் சார்பில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.