உக்ரைன் - ரஷ்யா போர்: பேரழிவை தரும் அணு ஆயுத சோதனைக்கு வடகொரியா தயார்?.. உலக நாடுகள் பதைபதைப்பு.!

உக்ரைன் - ரஷ்யா போர்: பேரழிவை தரும் அணு ஆயுத சோதனைக்கு வடகொரியா தயார்?.. உலக நாடுகள் பதைபதைப்பு.!



North Korea Use Ukraine Russia Crisis Test Atomic Bomb Long Travel Missile

சோவியத் யூனியனுடன் உக்ரைன் நாட்டை மீண்டும் இணைக்க உச்சகட்ட போர் நடந்து வருகிறது. சில மணிநேரம் அல்லது இன்றைக்கும் உக்ரைன் முழுவதும் ரஷியாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்முனை தாக்குதலும் உக்ரனை அதிர வைத்துள்ளது. இந்த சூழலில், உக்ரைன் நாட்டின் பிரதமர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கை (Volodymyr Zelenskyy), அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேசியுள்ளார். உலக நாடுகள் ஒன்று சேர்ந்து தங்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவில், "இந்த தாக்குதல் கொண்டு வரும் மரணம் மற்றும் அழிவுக்கு ரஷ்யா மட்டுமே பொறுப்பாகும், மேலும் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பங்காளிகளும் ஒன்றுபட்ட மற்றும் தீர்க்கமான வழியில் பதிலளிப்பார்கள். உலகம் ரஷ்யாவை பொறுப்புக்கூற வைக்கும்" என்று தெரிவித்துள்ளார். 

North Korea

உக்ரைன் - ரஷியா பிரச்சனையை உலக நாடுகள் தீர்க்க முயற்சித்து வரும் நிலையில், வடகொரியா தனது நியூக்ளியர் அணு ஆயுத ஏவுகணையை சோதனை செய்ய இதுவே தக்க தருணம் என எண்ணி, தொலைதூரம் சென்று தாக்கும் அணு ஆயுதத்தை சோதனை செய்ய காத்திருப்பதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளன. 

இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், அமெரிக்காவின் மீது கோபத்தில் உள்ள வடகொரியா ஏற்கனவே பலமுறை தடையை மீறி ஏவுகணை சோதனை நடத்தி வந்த நிலையில், தற்போது பேரழிவை ஏற்படுத்தும் நியூக்ளியர் அணு ஆயுதத்தை சோதனை செய்யலாம் அல்லது அதனை வைத்து தாக்குதல் நடத்தி பதற்றத்தை அதிகரிக்கலாம் என தகவல் கசிந்துள்ளது. அமெரிக்கா உக்ரைன் விவகாரத்தை ஒருபுறம் கண்காணித்துக்கொண்டு இருந்தாலும், தனது எதிரிகள் மீது வைத்துள்ள கண்ணை எப்போதும் அகற்றாது என்பதும் குறிப்பிடத்தக்கது.