ஐயோ.. வேணாம் டா ப்ளீஸ் மேல வா..! 43வது மாடியில் இருந்து குதித்த வாலிபர் சுக்குநூறாக பலி! வீடியோவை பார்த்தா ஹார்ட் அட்டேக்கே வந்துடும் போல... பதற வைக்கும் விபரீதம்.!!!
டெல்லி அருகே நொய்டாவில் உள்ள சூப்பர்நோவா வளாகத்தில் 43-வது மாடியில் இருந்து 29 வயது இளைஞர் கீழே விழுந்து உயிரிழந்தார். ஹரியானாவின் மானேசரைச் சேர்ந்த சம்பவ் ஜெயின் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை வளாகத்தில் தங்கியிருந்த அவர், சனிக்கிழமை செக்-அவுட் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
காப்பாற்ற நடந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை
நொய்டா செக்டார் 94-ல் உள்ள சூப்பர்நோவா ஸ்பைரா டவரில் சம்பவ் ஜெயின் தங்கியிருந்தார். அவர் உயரமான மாடியின் பால்கனி பகுதியில் இருந்ததை பார்த்த சிலர், அவரை தடுத்து நிறுத்த முயன்றனர். அருகிலுள்ள குடியிருப்பில் ஏசி பழுதுபார்க்கும் பணியில் இருந்தவர்களும் அவரிடம் பேசி சமாதானப்படுத்த முயன்றதாக போலீஸார் கூறியுள்ளனர்.
அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் இந்த முயற்சிகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், முயற்சிகள் பலனளிக்காத நிலையில் சம்பவ் ஜெயின் கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தந்தைக்கு அழைப்புகள்; வாட்ஸ்அப் தகவல்களும் ஆய்வு
தகவல் கிடைத்ததும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணையை தொடங்கினர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பியதுடன், தடய அறிவியல் குழுவினரும் அங்கு ஆய்வு மேற்கொண்டு ஆதாரங்களை சேகரித்தனர். அருகிலுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளும் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
சம்பவத்துக்கு முன்பாக சம்பவ் தனது தந்தையை பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டதாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவரது WhatsApp தகவல்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் உயிரிழப்புக்கு முன்பு அவரது நடவடிக்கைகள் மற்றும் தொடர்புகள் குறித்து போலீஸார் தகவல்களை திரட்டி வருகின்றனர்.
கடன் பிரச்னையா? போலீஸார் தீவிர விசாரணை
ஆரம்பகட்ட விசாரணையில் சம்பவ் ஜெயின் நிதி நெருக்கடி மற்றும் கடன் பிரச்னையால் மன அழுத்தத்தில் இருந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவே அவரது உயிரிழப்புக்கான காரணம் என்று போலீஸார் இதுவரை உறுதி செய்யவில்லை. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சூப்பர்நோவா வளாகத்தில் இதற்கு முன்பும் உயிரிழப்பு சம்பவங்கள் நடந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது 29 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை, சிசிடிவி காட்சிகள் மற்றும் சேகரிக்கப்பட்ட பிற ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடைபெற உள்ளது.
🚨 Noida: A young man died by suicide at Supernova Society, Sector 94.
Police have reached the spot, taken the body into custody, and started an investigation.
Suicides among men are increasing nowadays. What are the causes? pic.twitter.com/GxvzLgpaLy
— News Matrix (@NewsMatrixIND) October 3, 2026