அத்துமீறிய போதையில் இருந்த பெண்ணை பத்திரமாக கொண்டு வந்து சேர்த்த ஆட்டோ ஓட்டுநர்! வைரலாகும் வீடியோ..!!!
மும்பையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் காட்டிய நேர்மையும் பொறுப்புணர்வும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. போதையில் இருந்த பெண் பயணியை பாதுகாப்பாக வீட்டில் சேர்த்ததுடன், அவரது உடமைகளும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்திய சம்பவம் பலரது பாராட்டைப் பெற்று வருகிறது.
பயணத்தின் போது எடுத்த முன்னெச்சரிக்கை
முலுண்ட் பகுதியில் இருந்து ஐரோலிக்குச் செல்ல ஆட்டோவில் ஏறிய பெண் ஒருவர் கடுமையான போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. தகவலின்படி, அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் கையில் இருந்த இரண்டு செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஆட்டோ ஓட்டுநர் பயணத்தின் போது வீடியோ பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: வேலை முடிந்து வீடு திரும்பியும் நிம்மதி இல்லை! தூக்கத்தை துளைத்த இளம்பெண் செய்த தரமான சம்பவம்! நள்ளிரவில் அலறிய அதிகாரிகள்.!!!
மேலும், பயணத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் பதிவு செய்து வைத்தது பின்னர் எந்தவித தவறான புரிதலும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே என கூறப்படுகிறது.
பத்திரமாக வீட்டில் சேர்த்த ஓட்டுநர்
பயணத்தின் முடிவில், அந்தப் பெண்ணை அவரது வீட்டிற்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். அதன்பின் அவர் மற்றும் அவரது உடமைகள் அனைத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு சாதாரண பயணமாக இருந்தாலும், அதனை பொறுப்புடன் கையாண்ட விதம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செயல்பட்டது பாராட்டைப் பெற்றுள்ளது.
இணையத்தில் குவியும் பாராட்டுகள்
இந்த சம்பவம் தொடர்பான வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலரும் அந்த ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை மற்றும் மனிதநேயத்தை பாராட்டி பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.
“பணத்தை விட குணநலன்தான் முக்கியம்”, “இப்படிப்பட்ட மனிதர்கள் இன்னும் சமூகத்தில் இருக்கிறார்கள் என்பதே நம்பிக்கையை தருகிறது” என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மனிதநேயமும் பொறுப்புணர்வும் இன்னும் சமூகத்தில் உயிருடன் இருப்பதை இந்த நிகழ்வு மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளதாக பலரும் குறிப்பிடுகின்றனர்.
⚠️हर पुरूष खराब नहीं होता।
— अश्विनी सोनी (@Ramraajya) June 11, 2026
एक ने #370 वाला बयान दिया तो उसको सभी से ना जोड़ें। हर एक की सोच घटिया नहीं होती।
एक रिक्शा वाले को नशे में धुत्त महिला सवारी मिली
महिला के पास 2 मोबाइल और सोने की चैन भी थी और रिक्शा वाले ने उसे सुरक्षित उसके घर छोड़ दिया।
मगर अपनी सेफ़्टी के लिए… pic.twitter.com/oxkB0YzfUs